Doctor Vikatan: கஃபைன் கலந்த அழகு சாதனங்களைப் பயன்படுத்தலாமா?
Doctor Vikatan: சமீபகாலமாக சருமத்துக்கும் கூந்தலுக்குமான அழகு சாதனப் பொருள்களில் கஃபைன் இருப்பதாக நிறைய விளம்பரங்களைப் பார்க்க முடிகிறது.
கஃபைன் உள்ள அழகு சாதனங்கள் உண்மையிலேயே ஆரோக்கியமானவையா…. அவற்றை எல்லோரும் பயன்படுத்தலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
கஃபைன் உள்ள அழகு சாதனங்கள்தான் இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட். கஃபைனில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மைகள் உண்டு. கஃபைனை உள்சிகிச்சையாக எடுக்கும்போதும் சரி, மேல்பூச்சாக உபயோகிக்கும்போதும் சரி, அதிலுள்ள ‘தியோஃபைலின்’ (Theophylline) நம் ரத்தக்குழாய்களை விரிவுபடுத்திக் கொடுக்கும்.
கண்களுக்கடியில் கருவளையங்கள் உள்ளோர், அதற்கான தீர்வாக கஃபைன் உள்ள க்ரீமையோ, ஜெல்லையோ பயன்படுத்துகிறார்கள்.
இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டாலோ, கண்களுக்கு அடியில் உள்ள சின்னச் சின்ன ரத்தக்குழாய்களுக்கு ரத்த ஓட்டம் சீராகப் போகாவிட்டாலோ அந்தப் பகுதி கருமையடையத் தொடங்கும்.