Doctor Vikatan: கேட்கும் திறனில் பிரச்னை உள்ளவர்கள், அதிக சத்தத்துடன் பேசுவார்களா?
Doctor Vikatan: சிலர் போனிலும் சரி… நேரிலும் சரி… அதிக சத்தத்துடன் பேசுவதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்…
காது கேட்கும் திறனில் குறைபாடு உடையவர்கள் இப்படிப் பேசுவார்கள் என்பது உண்மையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.
காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் சென்னை
மிகவும் மெதுவாகப் பேசினாலே மற்றவருக்குக் கேட்கும் என்ற நிலையிலும் சிலர், உரத்த குரலில் எல்லோருக்கும் கேட்பதுபோல பேசும் பழக்கம் கொண்டிருக்கலாம்.
அதிக சத்தத்துடன் நேரிலோ தொலைபேசியிலோ பேசுவதற்கு, அப்படிப் பேசுபவரின் காது கேளாமை பிரச்னை பரவலான காரணமாக இருக்கக்கூடும். பிறர் பேசுவது சரியாகக் கேட்காததால், தான் பேசுவதும் மற்றவர்களுக்குக் கேட்காது என்ற எண்ணத்தில், தன்னையும் அறியாமலே குரல் உயர்த்திப் பேசுவது அவர்களுக்குப் பழக்கமாகி விடும். இது தவிர சிலருக்கு ஆளுமைக் கோளாறு காரணமாகவும் குரலை உயர்த்தி சத்தமாகப் பேசும் பழக்கம் இருக்கலாம்.