Doctor Vikatan: கர்ப்பிணிகளுக்கும் ஹார்ட் அட்டாக் வருமா?
Doctor Vikatan: என் தோழி தன் 33 வயதில் பிரசவத்தின்போது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டாள். இப்போது நான் இரண்டாவது முறையாகக் கர்ப்பமாக இருக்கிறேன்.
கர்ப்ப காலத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்படுமா… அதற்கு என்ன காரணங்கள்… எல்லாப் பெண்களுக்கும் அந்த ரிஸ்க் இருக்கிறதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் குருபிரசாத் சோகுனுரு.
25 முதல் 40 வயதுகளில் உள்ளவர்களில் பலரும் இதயநோயால் அவதிப்படுவதையும் மாரடைப்புக்கு உள்ளாவதையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடற்பயிற்சிகளே செய்யாதது ஆகியவையே மாரடைப்புக்கான ரிஸ்க் காரணிகள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட இன்னொரு காரணமும் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். அதற்கு `ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன்’ (Spontaneous coronary artery dissection -SCAD) என்று பெயர்.
கரோனரி ஆர்ட்டரி எனப்படும் ரத்தக்குழாய்தான் இதயத்துக்கு ரத்தத்தை சப்ளை செய்கிறது. இதயத்தில் இன்டர்னெல் லேயர், மிடில் லேயர், எக்ஸ்டெர்னல் லேயர் என மூன்றுவிதமான லேயர்கள் இருக்கும். ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன் பிரச்னையில் இன்டர்னெல் லேயர் கிழியும். அதன் விளைவாக மாரடைப்பு ஏற்படும்.