Doctor Vikatan: தூக்கமின்மை இதயத்தை பாதிக்குமா?

D octor Vikatan: என் வயது 56. இரவில் தூக்கம் வருவதில்லை. தூக்கமின்மை என்பது மனதையும் இதயத்தையும் பாதிக்குமா?

 

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

ஆரோக்கியமான தூக்கம் என்பது இதய ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. போதுமான தூக்கமில்லாதபோதும், தூக்கத்தில் தொந்தரவுகள் இருக்கும்போதும் ரத்த அழுத்தம் பாதிக்கப்படலாம். இதனால் பகலிலும் இரவிலும் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதயநோய்க்கான அபாயம் அதிகரிக்கும்.

மோசமான தூக்கம் இதயத்துடிப்பில் மாறுபாட்டை ஏற்படுத்தும், இது இதயத்துக்கு அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்தும். தவிர, மோசமான தூக்கம், ஸ்ட்ரெஸ்ஸுக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். இதுவும் இதய நோய்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். உடலில் கொழுப்பை அதிகரிப்பதிலும் டைப் 2 நீரிழிவு பாதிப்பை ஏற்படுத்துவதிலும் தூக்கமின்மைக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *