Doctor Vikatan: சிசேரியன் செய்த தையலில் வலி… அறுவைசிகிச்சை இல்லாத தீர்வு உண்டா?
Doctor Vikatan: என் வயது 40 ஆகிறது. இரண்டு பிரசவங்களும் சிசேரியன். இரண்டாவது மகளுக்கு இப்போது நான்கு வயது ஆகிறது.
கடந்த ஒன்றரை வருடங்களாக எனக்கு சிசேரியன் அறுவைசிகிச்சை செய்த தையலில் ஓரிடத்தில் மட்டும் வலி இருந்து வந்தது. ஸ்கேன் செய்து பார்த்துபோது அது `ஸ்கார் எண்டோமெட்ரியாசிஸ்’ (scar endometriosis) என்றும், அதற்க அறுவைசிகிச்சை மட்டுமே தீர்வு என்றும் கூறினார்கள். மாற்று மருத்துவத்தில் இதை அறுவைசிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி.
கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய எண்டோமெட்ரியல் கேவிட்டியில், சாதாரணமாக இருக்கக்கூடிய எண்டோமெட்ரியல் திசுவானது, அங்கே இல்லாமல் வேறிடங்களில் இருப்பதையே எண்டோமெட்ரியாசிஸ் என்கிறோம்.
இந்தத் திசுவானது சினைப்பையிலோ, இடுப்பெலும்புப் பகுதியிலோ, சிறுநீர்ப்பையிலோ, கர்ப்பப்பையின் மேல் பகுதியிலோ… இப்படி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள ஸ்கார் எண்மோமெட்ரியாசிஸ் என்பது சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஏற்படுகிற அரிதான ஒரு நிகழ்வு.