Doctor Vikatan: விரதமிருக்கும் நாள்களில் தலைவலி அதிகரிப்பது ஏன்?
Doctor Vikatan: நான் வாரத்தில் ஒரு நாள் விரதம் இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். விரதம் இருக்கும் நாள்களில் எனக்கு தலைவலி வருகிறது…
சில நாள்களில் அது ரொம்பவே அதிகரிக்கிறது. இதற்கு விரதம் இருப்பதுதான் காரணமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
அதன்படி நீங்கள் கீழ்க்குறிப்பிட்ட பிரிவுகளில் வருபவர் என்றால் விரதம் இருக்கவே கூடாது.
வளரும் குழந்தைகள் விரதம் இருக்கவே கூடாது. அந்த வயதில் அவர்களுக்கு நிறைய கலோரிகள் தேவைப்படும், விரதமிருப்பதன் மூலம் அது தடைபடும். அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் குழந்தைகள் விரதமிருப்பதை ஊக்கப்படுத்தாதீர்கள்.
மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்னை பலருக்கும் இருக்கும். அவர்கள் விரதம் என்ற பெயரில் சாப்பிடாமல் இருப்பதால் ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து, அதன் விளைவாக மைக்ரேன் பாதிப்பு இன்னும் அதிகமாகும். எனவே, இவர்களுக்கும் விரதம் ஏற்றதல்ல. கர்ப்பிணிகளும் விரதம் இருக்கக் கூடாது.
பாட்டில் பாட்டிலாக செரிமானத்துக்கான ஆன்டாசிட் மருந்துகள் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இவர்களுக்கும் விரதம் என்பது ஏற்றதல்ல.
ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நீரிழிவு பாதித்தோரும் விரதம் இருக்கவே கூடாது. நீரிழிவு, இதயநோய்கள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி, உணவு விஷயத்தில் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமலிருப்பதுதான் சரி. குறிப்பாக, நீரிழிவு பாதித்தோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது என்றே மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.