Doctor Vikatan: அடிக்கடி அவதிக்குள்ளாக்கும் அஜீரண பிரச்னை… வீட்டு சிகிச்சையில் தீர்வு உண்டா?

Doctor Vikatan: வேலைக்காக சென்னையில் தங்கியிருக்கிறேன். வீட்டில் சமைத்துச் சாப்பிட முடியாத நிலையில், பெரும்பாலும் வெளி உணவுகளை நம்பிதான் இருக்க வேண்டியுள்ளது.
இதனால் அடிக்கடி அஜீரண பிரச்னை வருகிறது. இதைச் சமாளிக்க வீட்டு சிகிச்சை ஏதேனும் உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் தலத் சலீம்.
வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்கவே முடியாத காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கூடியவரையில், தரமான உணவகங்களில், சுகாதாரமாகத் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதை உறுதிசெய்து கொள்வது அவசியம்.
வீட்டு உணவுகளைச் சாப்பிடும்போது வயிற்று உப்புசம், வாய்வுத்தொல்லை, ஏப்பம் உள்ளிட்ட எந்தப் பிரச்னைகளும் ஏற்படுவதில்லை. அதுவே, வெளி உணவுகளைச் சாப்பிடும்போது பெரும்பாலானவர்களுக்கு இவற்றில் எல்லாமுமோ, சில பிரச்னைகளோ ஏற்படுகின்றன. அஜீரணம் என்ற பிரச்னையை பலரும் மிகவும் அலட்சியமாகக் கையாள்கிறார்கள்.