எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பைக்குகளின் விலை 10 % வரை உயருகின்றதா..!

ICRA வெளியிட்டுள்ள புதிய Electric Mobility Promotion Scheme 2024 விதிகளின் படி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளின் விலை 10 % வரை உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற FAME 2 மானியம் மார்ச் 31 ஆம் தேதி நிறைவடைகின்றது.

சில மாதங்களுக்கு முன்னர் மானியம் குறைக்கப்பட்ட பொழுது ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டது

தற்பொழுது இந்தியாவின் கடன் மதிப்பீட்டு மையம் (Investment Information and Credit Rating Agency of India Limited) தயாரித்து இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்ட எலக்ட்ரிக் மொபிலிட்டி ப்ரோமோஷன் திட்டம் 2024 (EPMS) ஆனது, ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை நான்கு மாதங்களுக்கு இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக மொத்தம் ரூ 500 கோடியை ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியம் ஒரு Kwh பேட்டரிக்கு ரூ.10,000 ஆக இருந்த மானியம் ரூ. 5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது, எனவே, ஒரு வாகனத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை மட்டுமே பலன் கிடைக்கும்.

புதிய திட்டத்தின் மூலம் ICE இரு சக்கர வாகனங்களை விட மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை 70 சதவீதம் அதிகமாக இருக்கும் என ICRA அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்ற பிஎல்ஐ திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தின் கவனம் நடுத்தர காலத்தில் மின்சார வாகன தத்தெடுப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த தொழிற்துறையில் மின்சார இரு சக்கர வாகனங்களின் பங்களிப்பு 2025 ஆம் ஆண்டில் 6-8 சதவீதமாக அதிகரிக்கும் என்று ICRA கணித்துள்ளது, இது தற்போது தோராயமாக 5 சதவீதமாக உள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஏதெர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு ரூ.22,485 மானியம் வழங்கப்படுகின்றது. புதிய விதிமுறை நடைமுறைக்கு ஏப்ரல் 1 முதல் வரவுள்ளதால், இனி மானியம் ரூ.10,000 மட்டுமே வழங்கப்படும். எனவே ஸ்கூட்டரின் விலை 12,485 வரை உயரக்கூடும். இதன் காரணமாக புதிய விலை ரூ. 1.57 லட்சத்தை எட்டலாம். தற்பொழுது ஏதெர் 450 எக்ஸ் விலை ரூ.1,44,871 (எக்ஸ்ஷோரூம்) ஆகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *