விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஆண் குழந்தையின் பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா? சூப்பரா இருக்கே

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் ஆண் குழந்தை தற்போது பிறந்து இருக்கிறது. இதனை இந்த ஜோடி மிக மகிழ்ச்சியுடன் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.
குழந்தை பிப்ரவரி 15ஆம் தேதியே பிறந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு பிறகு தான் இந்த செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் குழந்தையான வாமிக்கா கடந்த ஜனவரி 2021 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
இந்தக் குழந்தைக்கு அக்காய் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் ஹிந்தி வார்த்தையா இல்லை வேறு ஏதேனும் வார்த்தையா என்று ரசிகர்கள் குழம்பி தேடினர். ஆனால் விராட் கோலி எப்போதுமே கவிதை நயத்துடன் வாழ்க்கையை வாழ்பவர். தன்னுடைய மனைவி குழந்தைக்கு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்பவர்.
இதனால் பெயரில் மட்டும் சும்மா விட்டு விடுவாரா என்ன? தன்னுடைய ராஜியத்தை ஆள வந்திருக்கும் இளவரசனுக்கு ஒரு ஸ்பெஷலான பெயரை தான் வைத்திருக்கிறார். அதாவது அக்காய் என்றால் துருக்கி மொழியில் உள்ள பழம்பெரும் வார்த்தையாம். இதற்கு ஜொலிக்கும் நிலவு என்று அர்த்தம். மேலும் இதற்கு இன்னொரு ஒரு அர்த்தமும் இருக்கிறது.
அக்காய் என்றால் வழிகாட்டி மற்றும் கைகளைக் கொண்டு வழிநடத்தபவன். பாதுகாவலன் போன்ற பொருளும் இருக்கிறது. மேலும் இந்த பெயர் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் வைக்கலாம். இதனால்தான் இப்படி ஒரு வித்தியாசமான பெயரை விராட் கோலி தேர்வு செய்து இருக்கிறார்.
தன்னுடைய இளவரசனை பார்ப்பதற்காக தான் விராட் கோலி அவசர அவசரமாக கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி தனது மனைவியுடன் பிரசவத்திற்கு சென்று அவரை கவனித்துக் கொண்டிருக்கிறார். இதனால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். நாட்டுக்கு ஒரு நல்ல வீரனாகவும், குடும்பத்திற்கு ஒரு நல்ல தலைவனாகவும் இருப்பதாக ரசிகர்கள் அவரைப் போற்றி வருகின்றனர்.