விராட் கோலிக்கு அப்படி ஒரு நினைப்பா? அவர் இல்லாமல் இந்தியா ஜெயிக்காதா.. பொளந்து கட்டிய கவாஸ்கர்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருக்கிறார். அவர் இந்த தொடரின் சில போட்டிகளிலாவது ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடரின் ஐந்து போட்டிகளில் இருந்தும் ஒட்டுமொத்தமாக விலகினார்.

மூத்த வீரரான விராட் கோலி இப்படி நடந்து கொள்வது சரியல்ல என்ற கருத்தை நேரடியாக அவர் பெயரை சொல்லி சொல்லாமல் மறைமுகமாக விமர்சித்து வருகிறார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.

குறிப்பாக கோலி பெயரை சொல்லாமல், சில பெரிய வீரர்களுக்கு அவர்கள் இல்லாமல் இந்திய அணி ஜெயிக்காது என்ற நினைப்பு உள்ளது. ஆனால், அந்த பெரிய வீரர் இல்லாமல் இந்தியா 2021இல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. தற்போது இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது என கூறி இருக்கிறார் கவாஸ்கர்.

விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 3 – 1 என கைப்பற்றி உள்ளது. மேலும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் அதிலும் இந்தியா வென்றால் 4 – 1 என்ற கணக்கில் இந்தியா இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தும்.

இது பற்றி சுனில் கவாஸ்கர் பேசியது – “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் பல பெரிய வீரர்களை தவறவிட்டது. ஆனாலும், அப்போது காபாவில் மட்டுமல்ல. அடிலெய்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு மெல்போர்னில் வென்றனர் மற்றும் சிட்னியில் டிரா செய்தனர். அவர்கள் கடுமையாகப் போராடினர். சிட்னி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அரை மணி நேரம் கிரீஸில் நின்றிருந்தால் அந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய இளம் வீரர்கள் காட்டிய துடிப்பும், முயற்சியும் இந்த முறை இங்கிலாந்துக்கு எதிராகவும் தெரிந்தது.”

“அதனால்தான் நான் எப்போதும் சொல்கிறேன், உங்களுக்கு பெரிய வீரர்கள் தேவையில்லை… அவர் இல்லாமல் இந்தியா வெல்லாது என்று எந்தப் பெரிய வீரராவது நினைத்தால், நீங்கள் இருக்கிறீர்களோ இல்லையோ, கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு என்பதை இந்த இரண்டு தொடர்களும் காட்டியுள்ளன. இது ஒரு தனி நபரைச் சார்ந்தது அல்ல.” என்று அழுத்தம் திருத்தமாக கூறி இருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *