P என்ற எழுத்தில் உங்க பெயர் தொடங்குதா? உங்களின் பலம், பலவீனம் இவைதான்…
ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவரையில் பெயர் ஆரம்பிக்கும் எழுத்துக்கும் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.
எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதே இதன் பொருள்.
அந்த வகையில் பெயரின் முதல் எழுத்து Pஎன்ற எழுத்தில் ஆரம்பித்ததால் அவர்களுக்கு என்னென்ன சிறப்பு பண்புகள் இருக்கும் என்பது குறித்தும் அவர்களின் பொதுவாக இயல்புகள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
P என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் மிகவும் அமைதியானவர்களாகவும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்ககூடியவர்களாகவும் இருப்பார்கள்.
விசேட பண்புகள்
இயல்பிலேயே வசீகர தோற்றம் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பணம் மற்றும் பெயர் இரண்டையும் இலகுவில் பெற்றுவிடுவார்கள்.
P என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் காதல், உணர்ச்சி மற்றும் அன்பின் கூட்டில் உருவான நபராக இருப்பார்கள். காதல் விடயத்தில் மிகவும் உண்மையாகவும் விசுவாசமாகவும் நடந்துக்கொள்வார்கள்.
இவர்களை மற்றவர்கள் எளிதில் நம்புவார்கள். நம்புவது மட்டும் இல்லாமல் அவர்களது பிரச்னைகளை உங்களிடம் சொல்லி அதற்கான தீர்வை உங்களிடம் கேட்டுப் பெறுவரார்கள்.
P என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்கள் இரக்கமுள்ளவர்களாக இருப்பார்கள்.உறவுகளில், நீங்கள் புரிந்துகொள்ளும், பொறுமை மற்றும் ஆதரவு உங்களை உங்கள் உறவுகளோடு பிணைத்து வைத்திருக்கும்.
அதன் விளைவாக யாருக்கு எப்போது பிரச்சினை ஏற்பட்டாலும் முதலில் உதவிக்கரம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்வில் வெற்றியடையடைவது மிகவும் சுலபமாக நடந்துவிடும்.