உங்க ஏரியால மழை பெஞ்சா அதிகம் தண்ணீர் நிக்குமா? சாலையும் சரியில்லையா? இந்த காரு இந்த 2யும் அசால்டு பண்ணிடும்!

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ம் ஒன்றாகும். இது பலதரப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும், பெட்ரோல், டீசல் கார்களை போலவே மிக தாராளமான எண்ணிக்கையில் மின்சார கார் மாடல்களையும் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின்கீழ் நெக்ஸான் இவி, டியாகோ இவி மற்றும் டிகோர் இவி என மூன்று விதமான எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் வேற எந்த பட்ஜெட் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இந்த அளவு அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

இந்த நிலையிலேயே மேலே பார்த்த எலெக்ட்ரிக் கார் மாடல்களின் வரிசையில் விரைவில் டாடா மோட்டார்ஸ் மேலும் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. அதுதான் நிறுவனத்தின் புகழ்பெற்ற மைக்ரோ எஸ்யூவி ரக கார் மாடலான பஞ்ச் ஆகும்.

ஆமாங்க, இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த காரை வெற்றிகரமாக டாடா மோட்டார்ஸ் அண்மையிலேயே வெளியீடு செய்தது. இதைத்தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக இன்னும் ஒரு சில தினங்களில் அந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட இருக்கின்றது.

இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்த கார் வருகின்ற 17 ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே இந்த காரின் சிறப்பு வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, டாடா பஞ்ச்.இவி எளிதாக கரடு-முரடான பாதை மற்றும் நீர் நிறைந்த சாலைகளைக் கடக்கும் என்கிற தகவலே வெளியாகி இருக்கிறது.

தகவல் மட்டுமே வெளியாகவில்லை, அந்த கார் அனைத்து சவால்களையும் திறம்பட எதிர்கொள்ளும் வீடியோவும் வெளியாகி இருக்கின்றது. மிக மிக மோசமான ஆஃப்-ரோடில் பயணித்தல் மற்றும் காரை பாதியளவு மூழ்கச் செய்யக் கூடிய அளவிற்கு தண்ணீர் நிறைந்த குட்டையில் பயணித்தல் உள்ளிட்ட சவால்களையே அந்த கார் எதிர் கொண்டிருக்கின்றது.

இந்த சவால்களை அது வெற்றிகரமாகவும் முடித்திருக்கின்றது. ஆகையால், இந்தியாவில் ஏற்ற காராக பஞ்ச்.இவி உருவாக்கப்பட்டு இருப்பது மிக தெளிவாக தெரிகின்றது. டாடா மோட்டார்ஸ் இந்த காரை அதன் புத்தம் மின்வாக உற்பத்தி தளமான ஆக்டி.இவி-யை பயன்படுத்தியே தயார் செய்திருக்கின்றது. மின்சார வாகனங்களுக்கான புத்தம் புதிய தளமே இதுவாகும்.

இந்த தளத்தின் வாயிலாக முன் வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் வசதிக் கொண்ட கார்களை வடிவமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஓர் முழு சார்ஜில் 300 கிமீ முதல் 600 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரக் கூடிய எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடியும்.

இதேபோல், அதிக சிறப்பம்சங்கள்மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மின்சார காரையும் இந்த தளத்தில் வைத்து தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் பஞ்ச்.இவி எலெக்ட்ரிக் காரில் நெக்ஸான் இவியை போலவே நிறைய தொழில்நுட்ப அம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

உதாரணமாக 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை பஞ்ச்.இவி-யின் உயர்நிலை தேர்வில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று இன்னும் சகல வசதிகளை இந்த எலெக்ட்ரிக் காரில் நாம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக உயர்நிலை தேர்விலேயே கடல்போல் சிறப்பம்சங்கள் இடம் பெற இருக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் பஞ்ச்.இவி-யை ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் ஆகியவையே அவை ஆகும். இதேபோல் நிற தேர்வுகளும் மிக தாராளமாக இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது.

 

View this post on Instagram

 

A post shared by TATA.ev (@tata.evofficial)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *