பலகோடி மதிப்புள்ள சொத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுத்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் கடவுள்!..

Vijayakanth: வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி.. மக்களின் மனதில் நின்றவர் யார்?.. என்கிற கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் வெகு சிலர் மட்டுமே. காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், சிவாஜி, அப்துல் கலாம், பின்னணி பாடகர் எஸ்.பி., நகைச்சுவை நடிகர் விவேக், மயில்சாமி, பின்னணி பாடகர் பாலசுப்பிரமணியம் என வெகு சிலரின் இறப்பு மட்டுமே மக்களை அதிகம் பாதித்தது.

இதில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது குரலால் மக்களின் மனதில் இடம்பிடித்தார் என்றால் மற்ற அனைவரும் மக்களின் நலன் பற்றி யோசித்தவர்கள். மயில்சாமி தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து வந்தவர். அவரை பற்றி கேள்விப்பட்டே மக்களுக்கு அவர் மீது அன்பு ஏற்பட்டது.

அந்தவகையில் விஜயகாந்தின் மரணம் மக்களை பாதித்தது எனில் அது அவரின் எளிமையான மற்றும் மற்றவர்களுக்கு உதவிய அவரின் குணம்தான். விஜயகாந்த் தான் சம்பாதித்த பணத்தில் மட்டுமல்ல, அவரின் எதிர்காலத்திற்காக அவரின் அப்பா வாங்கி வைத்திருந்த சொத்தையும் மக்களுக்கே கொடுத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. அதை எப்போதும் எங்கேயும் அவர் சொல்லிக்கொண்டதும் இல்லை.

திருப்பரங்குன்றம் பெரிய ஆலங்குளம் எனும் இடத்தில் கிருஷ்ணன் என்பவரிடம் விஜயகாந்தின் அப்பா அழகர் சாமி 7 ஏக்கர் நிலத்தை மகனின் எதிர்காலத்திற்காக வாங்கினார். விஜயகாந்த் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்ததும் அந்த இடத்தை ஏழைகளுக்கு அரசு மூலம் தானமாக கொடுக்க முடிவு செய்தார்.

1998ம் வருடம் அந்த இடம் மாவட்ட கலெக்டர் மூலமாக ஏழைகளுக்கு கொடுக்கப்பட்டது. அதன் இன்றைய மதிப்பு 21 கோடியாகும். அந்த இடத்தில் குடியிருக்கும் சோனைமுத்து, துரைப்பாண்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இந்த இடத்தை எங்களுக்கு கொடுத்தார். அதில்தான் நாங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம்.

அவர் இப்போது மறைந்துவிட்டாலும் அவர் எங்களுக்கு இருப்பிடம் கொடுத்த வாழ்வளித்த கடவுளாகவே காட்சி அளிக்கிறார்’ என மிகழும் நெகிழ்ச்சியுடன் பேசினர். இப்படி வெளியே தெரியாமல் விஜயகாந்த் பலருக்கும் உதவி இருக்கிறார். பலரை படிக்கவும் வைத்திருக்கிறார். இதைப்பற்றியெல்லாம் எங்கேயும், எப்போதும் அவர் பெருமையாக பேசிக்கொண்டதே இல்லை’ என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *