இது போன்ற நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் : சென்னை காவல்துறை எச்சரிக்கை..!
திருமண தகவல் மையம் என்ற பெயரில், வரன் பார்த்து தருவதாக கூூறி ஆன்லைன் மூலம் பணம் பெற்றுக் கொண்டு, மோசடி செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.திருமண தகவல் மையங்கள் மூலமாக மர்மநபர்கள் சிலர் நூதன முறையில் மோசடியில் ஈடுபடுவதால் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று ஏற்கனவே காவல்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
மோசடியான ஒரு திருமண தகவல் மைய வலைதளங்களில் போலியாக சுயவிவரங்களை உருவாக்கி, வெளிநாட்டில் குடியேறியிருப்பவராக தன்னை உருவகப்படுத்திக்கொண்டு வெளிநாட்டில் உள்ள சுயவிவரங்களைத் தேடும் பெண்களை குறிவைத்து அவர்களது நம்பிக்கையை பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
பெண்களுடன் நெருங்கிப் பழகி, பின்னர் திருமணம் செய்ய விரும்புவதாக கூறி தான் ஆசையுடன் பரிசுகளை அனுப்பியிருப்பதாகவும், அது விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியால் நிறுத்தப்பட்டுள்ளது. அதை அங்கிருந்து விடுவிப்பதற்கு அவசரமாக லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது என பணத்தை பெற்று மோசடி செய்கிறார்கள்.
எனவே இதுபோன்று ஈடுபடும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில், அனைத்து வரன்களையும் எச்சரிக்கையுடன் அணுகுங்கள் வாழ்க்கை துணையினரை, பொதுவெளியில் மட்டுமே சந்தியுங்கள்.வரன் பின்புலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பணம் மற்றும் பொருள் உதவி கேட்டால் நிராகரியுங்கள். தினசரி நடவடிக்கைகளை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்துங்கள் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமண தகவல் மையங்கள் பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை