ரொம்ப சந்தோசப்பட வேண்டாம்.. சர்பிராஸ் கானுக்கு 2வது டெஸ்டில் வாய்ப்பு கிடையாது.. காரணம் இது தான்

IND vs ENG : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே விசாகப்பட்டினம் சென்று அங்கு பயிற்சி தொடங்கி இருக்கிறது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.
இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெல்ல மிகப் பெரிய தடை ஒன்று ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே விராட் கோலி, முகமது சமி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் தற்போது ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரிய இடியாக வந்து இறங்கி இருக்கிறது.
இதனால் மாற்று வீரராக சர்பிராஸ் கான், சவுரப் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அதிக சராசரி வைத்திருக்கும் சர்பிராஸ்கான் பல ஆண்டு காத்திருப்பதற்குப் பிறகு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கே எல் ராகுல் இல்லாத நிலையில் சர்பிராஸ் கானுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் 100% நம்பினர். ஆனால் தற்போது அதற்கு ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டு இருக்கிறது. தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டி வாய்ப்புக்காக இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.