இப்பவே புக் பண்ணாதான் உண்டு.. லேட் பண்ணும் ஒவ்வொரு நிமிஷமும் கைகளுக்கு வரும் நாள் தள்ளி போயிட்டே இருக்கும்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வாக தனது பஞ்ச் (Punch) கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் (Electric Version)-ஐ இந்தியாவில் வெளியீடு செய்து இருக்கின்றது. இந்தியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக பஞ்ச் இவி உள்ளது. ஆனால், இதன் அறிமுகம் பற்றிய எந்தவொரு தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை.
இந்த நிலை இந்தியர்கள் மிகுந்த ஏக்கத்திற்கு ஆளாக்கிவிட்டது என்றே கூறலாம். இந்த நிலையிலேயே யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் பஞ்ச் இவி-யை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்த காரை அது விற்பனைக்கு அறிமுக செய்ய இருக்கின்றது.
இதை முன்னிட்டே அறிமுகத்திற்கு வித்திடும் விதமாக பஞ்ச் இவி-யை அது இந்தியாவில் வெளியீடு செய்து இருக்கின்றது. இந்த கார் பற்றி அறிய வேண்டிய டாப் ஐந்து முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். புக்கிங் தொகைத் தொடங்கி காரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் வரை என அனைத்து முக்கிய தகவல்களையும் காணலாம், வாங்க.
எலெக்ட்ரிக் காரை வடிவமைக்க பயன்படுத்தப்பட்ட தளம்: டாடா மோட்டார்ஸ் பஞ்ச் இவி-யை, மின்சார வாகனங்களின் உற்பத்தி என்றே தயார் செய்து இருக்கும் புதிய ஆர்க்கிடெக்சரையே பயன்படுத்தியே வடிவமைத்திருக்கின்றது. இந்த ஆர்கிடெக்சர் ஆக்டி.இவி (Acti.EV architecture) என்று அழைக்கப்படுகின்றது. அட்வான்ஸ்டு கன்னெக்டட் டெக் இன்டெல்லிஜன்ட் எலெக்ட்ரிக் வெயிக்கிள் (Advanced Connected Tech-Intelligent.Electric Vehicle) என்பதே அதன் விரிவாக்கம் ஆகும்.
இந்த தளத்தை பயன்படுத்தி பஞ்ச் இவியை மட்டுமல்ல தன்னுடைய வருங்கால எலெக்ட்ரிக் கார் மாடல்கள் சிலவற்றையும் டாடா மோட்டார்ஸ் தயார் செய்ய இருக்கின்றது. கர்வ், ஹாரியர் மற்றும் சீரா ஆகியவற்றின் மின்சார வெர்ஷன்களே அந்த தளத்தில் தயார் செய்யப்பட இருக்கின்றன. இந்த தளத்தில் வைத்து 300 கிமீ முதல் 600 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் கார்களை தயார் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதிக ரேஞ்ச் திறனை போலவே அதிக அழகுமிக்க மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய வாகனங்களை தயார் செய்யும் நோக்கிலேயே இந்த தளம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த தளத்தின் வாயிலாக உருவாக்கப்படும் வாகனங்கள் அழகு மற்றும் தொழில்நுட்பங்கள் விஷயத்தில் சற்றும் குறைச்சலைக் கொண்டிருக்காது. இதற்கு சான்றாகவே தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் பஞ்ச்.இவி இருக்கின்றது. ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் மாடல் தாங்கி இருக்கின்றது.
பஞ்ச்.இவியில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களின் விபரம்: 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமிரா, வென்டிலேட்டட் முன் பக்க இருக்கைகள், ஒயர்லெஸ் சார்ஜர் மற்றும் 10.25 தொடுதல் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் ஏர் ப்யூரிஃபையர், சிங்கிள் பேன் பனோரமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கும்.
பஞ்ச்.இவியில் வழங்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு அம்சங்களின் விபரம்: ஆறு ஏர் பேக்குகளை பஞ்ச்.இவியின் அனைத்து வேரியண்டுகளிலும் டாடா கட்டாயமாக்கி இருக்கின்றது. இதுதவிர, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், இஎஸ்சி உடன் கூடிய ஏபிஎஸ், பிளைண்ட் வியூ மிர்ரர், மும்முனை பாயிண்ட் சீட் பெல்ட், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மவுண்ட், எஸ்ஓஎஸ் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.
வேரியண்ட் மற்றும் நிற தேர்வுகள் விபரம்: டாடா பஞ்ச்.இவி ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஸ்மார்ட் (Smart), ஸ்மார்ட் பிளஸ் (Smart Plus), அட்வென்சர் (Adventure), எம்பவர்டு (Empowered) மற்றும் எம்பவர்டு பிளஸ் (Empowered Plus) ஆகியவையே அவை ஆகும்.
இத்துடன், டேடோனா கிரே – பிளாக் ரூஃப் (Daytona Grey with Black roof), எம்பவர்டு ஆக்ஸைடு – பிளாக் ரூஃப் (Empowered Oxide with Black roof) மற்றும் ஃபியர்லெஸ் ரெட் – பிளாக் ரூஃப் (Fearless Red with Black roof) ஆகிய வண்ண தேர்வுகளும் இந்த காரில் வழங்கப்பட உள்ளன.
பயணத்தை இனிமையாக மாற்றுவதற்காக வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்களின் விபரம்: ஐசிஇ வெர்ஷன் பஞ்ச் காணப்படுவதைக் காட்டிலும் நவீன மற்றும் அதிக செயல்திறன் மிக்க ஏசி சிஸ்டம் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. டிசைனிலும் இது லேசாக மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. ஏசி சிஸ்டத்திற்கான துளைகள் காரின் மையப்பகுதியிலேயே இடம் பெற்றிருக்கின்றன.
இவை நேரடியாக இரு பக்கம் காற்றை வீசும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு இருக்கும். இதன் சென்டர் கன்சோலும் லுக்கும் லேசாக மாற்றப்பட்டு இருக்கின்றது. இத்துடன் புதிய ட்வின் ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர சொகுசாக அமர்ந்து செல்ல ஏதுவாக வழங்கப்பட்டு இருக்கைகளில் லெதர் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
ரேஞ்ச் விபரம்: டாடா பஞ்ச்.இவி-யின் ரேஞ்ச் பற்றிய விபரத்தை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேவேளையில், இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும் என்று மட்டும் தெரிகின்றது. 25 kWh பேட்டரி பேக் மற்றும் 35 kWh பேட்டரி ஆகிய ஆப்ஷன்களே இதில் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், இவற்றின் ரேஞ்ஜ் திறன் 300 கிமீ முதல் 400 கிமீ வரையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
விலை மற்றும் புக்கிங் விபரம்: இந்த காரின் விலை பற்றிய விபரங்கள் வெளியீடு செய்யப்படவில்லை. கூடிய விரைவிலேயே இது பற்றிய தகவலை டாடா மோட்டார்ஸ் வெளியீடு செய்ய இருக்கின்றது. அந்த நாளிலேயே காரின் பேட்டரி பேக், ரேஞ்ஜ் திறன் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் பற்றிய விபரங்களை அது வெளியீடு செய்ய இருக்கின்றது.
இப்போது காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கி விட்டன. ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இப்போது புக் செய்யும் நபர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிமுகத்தைத் தொடர்ந்து கார் டெலிவரி வழங்கப்படும். இதன் விலை ரூ. 8 லட்சம் தொடங்கி ரூ. 10 லட்சத்திற்குள்ளேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தகைய மலிவு விலையில் விற்பனைக்கு வரும் எனில் இந்த காருக்கு விற்பனையில் நல்ல ரெஸ்பான்ஸும் கிடைக்கக் கூடும். இவ்வாறு சூழல் இந்த காருக்கு சாதகமாக அமையும் எனில் இந்த காருக்கான காத்திருப்பு காலமும் பலமடங்கு அதிகரிக்க நேரிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.