பான் அட்டையில் மறந்தும் கூட இத பண்ணிடாதீங்க.., மீறினால் சிறை தண்டனை..!
முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படும் பான் கார்டை தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளனர். மேலும் இந்த தவறுகளுக்கு சிறை தண்டனை கூட கிடைக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
விதிகளின்படி, ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதமான செயல்.ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பவர்கள் அதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் கேன்சல் செய்து கொள்ளலாம். இதை மட்டும் வருமான வரித்துறை கண்டுபிடித்தால் உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை அபராதத்துடன் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
நிரந்தர அக்கவுண்ட் நம்பர் அல்லது பான் என்ற 10 இலக்க எண் வருமான வரித்துறையினரால் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கும், பிறவிதமான நிதி சார்ந்த பரிவர்த்தைகள் செய்வதற்கும் பான் கார்டு அவசியமானது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக பரிவர்த்தனைகளை செய்பவர்கள் கட்டாயமாக அவர்களது பான் விவரங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு விட்டதால் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது அதிகாரிகளால் எளிதாக கண்டுபிடிக்கப்பட்டு விடும். இதனால் நீங்கள் பெரிய சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரலாம்.
சில சமயங்களில் பான் கார்டு பெறுவதற்கான பல்வேறு விண்ணப்பங்களை தனிநபர்கள் சமர்ப்பித்து விடுகின்றனர். இதன் காரணமாக ஒரே நபருக்கு இரண்டு பான் நம்பரை வருமான வரித்துறை வழங்கி விடுகிறது.வருமான வரித்துறை வழங்கிய பான்கார்டுகளில் உள்ள பெயர் அல்லது பிறந்த தேதி போன்றவற்றில் பிழைகள் ஏற்படலாம். இதுபோன்ற நேரத்தில் நீங்கள் அதில் உள்ள தகவலை அப்டேட் செய்வதற்கு பதிலாக புதிய அப்ளிகேஷனை சப்மிட் செய்யும் பொழுது உங்களுக்கு மற்றுமொரு புதிய பான் கார்டு வழங்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் பான் கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் உண்மையானதாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் குளறுபடி இருந்தால் அவர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
பான் கார்டை ஆன்லைனில் கேன்சல் செய்வது எப்படி?
அதிகாரப்பூர்வ NSDL போர்ட்டலுக்கு சென்று ‘Apply for PAN Online’. என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து ‘Application Type’ பிரிவின் கீழ் உள்ள ‘Correction in Existing PAN Data’ ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
PAN கேன்சலேஷன் ஃபார்ம் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும். தேவையான விவரங்களை நிரப்பி, நீங்கள் சரண்டர் செய்ய நினைக்கும் கார்டுகளையும் குறிப்பிடவும். ‘Submit’ என்பதை கிளிக் செய்யவும்