ஜனவரி-20 ஆம் தேதி மறக்காம போங்க.. குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கியமான செய்தி.!!
தமிழக அரசு ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு, நிவாரண தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது.
இதனால் ரேஷன் கார்டுகளை பொதுமக்கள் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும். அதாவது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் போன்றவற்றை செய்தால் மட்டுமே அடுத்தடுத்த நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு சரியாக கிடைக்கும்.
இந்த நிலையில் ரேஷன் கார்டுகளை அப்டேட் செய்யும் விதமாக வரும் ஜனவரி 20ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சென்னை மண்டல உதவி ஆணையர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமின் மூலமாக ரேஷன் கார்டுகளை அப்டேட் செய்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் பொருட்கள் பெறுவது, உதவித்தொகை போன்றவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தாலும் அதைக் கேட்டு பூர்த்தி செய்து கொள்ளலாம்.