செவ்வாய் கிழமைகளில் இந்த விஷயங்களை மறந்தும் செய்ய வேண்டாம்?

செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீடு துடைத்தால் வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் வீட்டைவிட்டு வெளியே போய்விடுமா? அப்போ எப்போது வீட்டை சுத்தம் செய்யலாம். செவ்வாய் கிழமையில் என்னவெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய், வெள்ளி கிழமையில் வீட்டை துடைத்து சுத்தம் செய்யக்கூடாது. வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் வீட்டை துடைத்து சுத்தம் செய்தால் லட்சுமி கடாட்சம் வீட்டை விட்டு வெளியே சென்று விடுமா? கண்டிப்பாக இல்லை. செவ்வாய்க்கிழமை காலை, வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு செய்யக்கூடிய பூஜை தவறி விடக்கூடாது என்பதற்காகத்தான் முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்றும் வெள்ளிக்கிழமை அன்றும் காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தால் நிச்சயமாக பூஜை செய்யும் நேரம் தவறி விடும். அப்போது வீட்டில் ஐஸ்வர்யம் நிலைக்காது. லேசாக மன கஷ்டம் வர செய்யும். இதனால்தான் பூஜை செய்யும் நேரம் தவறக் கூடாது என்று முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்.

நம்முடைய வேலையை சுலபமாக்கி கொண்டால் தான் நம்முடைய மனது முழுவதையும் இறைவழிபாட்டில் இறை சிந்தனையில் ஈடுபடுத்த முடியும். பூஜை செய்யக் கூடிய அன்றைய தினமே எல்லா வேலையும் செய்தால் உடல் சோர்வு, மன சோர்வு ஏற்பட்டு விடும். நிச்சயமாக நம்முடைய வீட்டில் முழுமையான இறை வழிபாட்டில் ஈடுபட முடியாது.

வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள். எங்களால் அந்தக் கிழமையில் சுத்தம் செய்ய முடியாது என்றால், உங்களுக்கு எந்த கிழமை சவுகரியமுமோ, செவ்வாய்க் கிழமை வெள்ளிக் கிழமையை தவிர்த்துவிட்டு, மாலை 6 மணிக்கு முன்பாக உங்களுடைய வீட்டையும் பூஜை அறையையும், பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்துகொள்ளலாம்…

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *