இன்றைக்கு மீன் வாங்கும் போது இந்த “சங்கரா”வையும் கானாங்கெளுத்தியையும் மறந்துடாதீங்க..
மீன்களில் கலோரி குறைவாக உள்ள மீனாக இந்த கெளுத்தி திகழ்கிறது.. இதிலுள்ள புரதச்சத்து உடலுக்கு ஆற்றலை தரக்கூடியவை..கார்போஹைட்ரேட்கள் அவ்வளவாக இல்லை என்பதால், அடிக்கடி இந்த மீனை சாப்பிடலாம். விட்டமின் B12 நிறைந்த கெளுத்தி மீன், உடல் எடை குறைப்போருக்கு மிகவும் நல்லது. இதில் மத்தி மீன்களையும் சேர்த்து கொள்ளலாம்.
அதேபோல, உடல் எடையை குறைக்கக்கூடிய மீன்களில் ஒன்று ஷீலா மீன். இதை ஷீலா மீன் அல்லது சீலா மீன் என்பார்கள்.. ஊளி மீன் என்றும் இதை சொல்வார்கள்.. மிக மிக குறைந்த கலோரிகளும், அளவுக்கு அதிகமான புரதமும் கொண்டதுதான் இந்த ஷீலா மீன்.. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த மீன் பெஸ்ட் சாய்ஸ்.. இதில் சங்கரா மீனும் அடக்கம்.. வாரத்தில் 2 நாளாவது சங்கரா மீனை பயன்படுத்தலாம். காரணம், குறைந்த அளவிலான கலோரி அதிக புரதம் கொண்டவை…
மூளை ஆரோக்கியத்திற்கும், மனச்சோர்வை விரட்டவும், மனநிலை மேம்பாட்டிற்கும், இன்சுலின் எதிர்ப்பை குறைக்கவும் சங்கரா மீன் பெரிதும் உதவுகிறது.உடல் எடை குறைய, சங்கரா மீனில் குழம்பு, வறுவல் செய்வதைவிட, கிரில் செய்து சாப்பிட்டால் இன்னும் சத்துக்கள் அதிகம் கிடைக்கும் என்கிறார்கள்..அல்லது இந்த சங்கரா மீனின் தலையை மட்டுமே வைத்து, சிலர் சூப், ரசம் போல செய்வார்கள். சின்னவெங்காயம், இஞ்சி பூண்டு, தக்காளி, மிளகு, சீரகம் எல்லாம் சேர்த்து சூப் போல, ரசம் போல செய்து சாப்பிடுவார்கள். எந்த மீனிலுமே, மீனின் சதைப்பகுதியைவிட, மீனின் தலைப்பகுதிதான் அதிக ருசி என்பதை மறந்து விடக்கூடாது.
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கு, இந்த மீன் நிவாரணம் தருகிறது.. இந்த மீனில் சோடியம் மிகக்குறைவாகவும், துத்தநாகம், பொட்டாசியம்,கால்சியம் போன்றவை மிதமாகவும் உள்ளதால், உடலுக்கு பாதுகாப்பை தருகின்றன.. மேலும், மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளையும் குறைகின்றது.. அத்துடன் பார்கின்சன் நோயிலிருந்தும் மீட்கிறது.. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, புரதங்கள் நிறைந்த இந்த கெளுத்தியை வாரம் ஒருமுறையாவது சாப்பிடலாம்.
நாம் மீன்களை சமைத்தபிறகும்கூட, மீன்களின் உடலில் பாதரசம் காணப்படுகிறது. அதனால், மீன்களை எவ்வளவு பதப்படுத்தினாலும், எவ்வளவு கொதிநீரில் வேகவைத்தாலும், சில விஷப்பொருட்கள் முழுமையாக நீங்குவதில்லை. அதனால், மீன்களை கவனமாக பார்த்துதான் சாப்பிட வேண்டும். அதிகம் கழிவுகள் கலக்காத குறிப்பாக பாதரசம் இல்லாத மீன்வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இந்த பாதரசம் கொண்ட மீன்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும்.. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை அதிகளவு பாதிக்கும்.. பார்வை குறைபாடு ஏற்படுத்தும். அதனால்தான், இதுபோன்ற மீன்களை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
சால்மன், சங்கரா, வெளவால், நெத்திலி, விரால், கெளுத்தி, ஆற்று நண்டு, ஏரி நண்டு, காணாங்கெளுத்தி, சிப்பி, காலா, மத்தி, சிறிய இறால், ஊசி கனவா, கரி மீன், கிழங்கா போன்ற சிறிய வகை மீன்களின் உடலில், பாதரசத்தின் அளவு மிக குறைவாகவே இருப்பதால், இதை குழந்தைகளும், கர்ப்பிணிகளும் ஓரளவு சாப்பிடலாம்.