வியாழக்கிழமைகளில் இதை செய்ய மறக்காதீங்க… குழந்தைகளின் எதிர்காலம் ஒளிரும்!

மனிதனின் ஆசை அத்தனை சீக்கிரத்தில் திருப்தியடைவதில்லை. எவ்வளவு வசதிகள் வந்தாலும் இன்னும் இன்னும் என்று அலைபாயும் மனதுடனே பலரும் இருக்கிறார்கள்.

ஆசைப்படுவது நல்லது தானே? ஆசை இருந்தால் தான் முயற்சியும் பிறக்கிறது. பெரும்பாலானவர்கள், தங்களுக்கு குழந்தை… குறிப்பாக ஆண் குழந்தைப் பிறந்ததுமே.. நமக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரையும் விட அதிகம் தங்கள் மகன் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். மேலோட்டமாக இதை மறுத்தாலும், ஆழ்ந்து யோசித்தால், உங்கள் பிள்ளைகளுக்கான கல்வி பயிலும் இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து, உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்கும் கதைகள், கற்று தறும் பிற விஷயங்கள் என அனைத்திலும் இந்த ஆசை ஒளிந்திருக்கும். இந்த ஆசை தவறில்லை… அதில் பொறுமையும், முயற்சியும் இருப்பது தான் அவசியம்.

முதலில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தாங்க. அதன் பிறகு நம் குழந்தைஅ அறிவில், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க ஒவ்வொரு வியாழக்கிழமையும் இவரை வழிபட மறக்காதீங்க. வியாழக்கிழமை வழிபாடு என்றாலே நம்மில் பலரும் நவகிரக சன்னதிக்கு சென்று குரு பகவானை வழிபடுகிறோம். ஆனால், வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வழிபட மறந்து விடுகிறோம். ஞானத்துக்கு அதிபதி இவர் தான். சிவபெருமானின் யோக வடிவம் தான் இந்த தட்சிணாமூர்த்தி. பிறைசூடிய தெய்வங்கள் அனைத்துமே சிவபெருமானை பிரதிபலிப்பவை தான் என்கின்றன ஆகம விதிமுறைகள்.

சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் மனதை பாதிக்கும். தடைகளை களைந்து இடையூறுகளை ஒதுக்கி தள்ளி சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிக மிக அவசியம்.

இவற்றில் முதல் வடிவமாக சொல்லப்படுவது அமைதியே உருவான தென்முகக்கடவுளான தட்சணாமூர்த்தி ரூபம். கடைசி வடிவமாக வழிபடப் படும் சிவ வடிவம் பைரவர். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையோடு தான் சிவனை வழிபட வேண்டும். அந்த் வகையில் பெரும்பாலும் அனைத்து சிவ ஆலயங்களிலும் தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள்பாலிப்பர்.

தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் இரு வடிவங்களும் தமது தலையில் மூன்றாம் பிறையை சூடியவர்கள். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இவரை வழிபடும் முறைகள் மிக மிக எளிது.

இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் வந்து சேரும். கர்மவினைகள் படிப்படியாக நீங்கி மனம் அமைதி பெறும். எண்ணிய யாவும் ஈடேறும். ஞானகுருவாம் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வோம். வாழ்வில் வெற்றியையும், மனதில் அமைதியையும் பெறுவோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *