வேகமா எடை குறைக்க காலையில் மறக்காம இந்த ஜூஸ் குடிங்க போதும்
உடல் பருமன் என்பது இந்நாட்களில் மக்களை வாட்டி வதைக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருகின்றது. இதனால் ஒருவரது தோற்றத்தில் மாற்றம் ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் ஆளுமையிலும் இது பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. இது தவிர எடை அதிகரிப்பினால் பலவித நோய்களும் நம்மை தாக்குகின்றன. சமீப காலத்தில் அதிகமாகியுள்ள ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் செயல்பாடுகளற்ற வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. உடல் எடையை குறைக்க மக்கள் பலவித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய வழிகளிலும் இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பும் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கின்றது. தொப்பை கொழுப்பினால் (Belly Fat) பல வித நோய்கள் நம்மை எளிதில் தாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆகையால் தொப்பையில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்வதும் அப்படி சேர்ந்து விட்டால் அதை உடனடியாக குறைப்பதும் மிகவும் அவசியமாகும்.
காலை வேளையில் நாம் உட்கொள்ளும் உணவுகளும் பானங்களும் உடல் எடையுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளன. ஆகையால் காலையில் நாம் எதை சாப்பிடுகிறோம் என்பதில் அதிகப்படியான கவனம் தேவை.
வேகமாக தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க (Weight Loss) என்ன செய்ய வேண்டும்? இதற்கு காலையில் எதை உட்கொள்ள வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சுகாதார நிபுணர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் காலை வேளையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதை முக்கியமான ஒரு பழக்கமாக பரிந்துரைக்கிறார்கள். அதன் பிறகு எலுமிச்சை சாறு, ஊற வைத்த உலர் பழங்கள் என எதை வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். இதைத் தவிர உடல் எடையை குறைக்க காய்கறி சாறுகளும் (Vegetables Juices) மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் காய்கறி சாறுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெள்ளரி சாறு (Cucumber Juice)
வெயில் காலத்தில் வெள்ளரிக்காயை சாலட் செய்து சாப்பிடுவது மிகவும் அத்யாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. உடல் எடையை குறைக்க இதை ஜூஸ் செய்து சாப்பிடலாம். இதில் மிகக் குறைந்த அளவு கலோரி இருப்பது மிக முக்கியமான விஷயமாகும். அதிக அளவு நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் இதில் உள்ளன. இது உடலை நீரேற்றுத்துடன் வைத்திருக்கிறது. செரிமானத்தை சீராக்குவதுடன் நீண்ட நேரம் இது உடலுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது.
கேரட் சாறு (Carrot Juice)
அதிக அளவில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் சத்துக்கள் நிறைந்த கேரட் சாற்றை குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். இதைக் குடிப்பதால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கிறது. இதனால் ஆரோக்கியமற்ற தேவையற்ற உணவுகளை நாம் உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இது கலோரி உட்கொள்ளலை குறைக்கிறது. இதுமட்டுமின்றி கேரட் சாறு செரிமானத்தை சீராக்கி வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகப்படுத்துகின்றது.
கீரை சூப் (Spinach Soup)
கீரை சூப்பில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன் ஆரோக்கிய நன்மைகளும் அதிகமாக உள்ளன. இதில் கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் பல வித வைட்டமின்களும் நிறைந்துள்ளன. கீரை சூப் குடிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. வளர்ச்சிதை மாற்றம் இதனால் அதிகரிப்பதோடு கலோரிகள் வேகமாக எரிவதிலும் உதவி கிடைக்கின்றது. இது பசியை கட்டுப்படுத்தவும், வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் வைக்கவும் உதவுவதால் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடை வேகமாக குறைக்க இது மிக பயனுள்ளதாக இருக்கும்.