வேண்டாம் ! சொன்னா கேளு! நீ தையரிமா எடு மாமே.. ஜடேஜாவை நம்பி ஏமாந்த ரோகித் சர்மா
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி பேஸ் பால் என்ற அதிரடியாக விளையாடும் யுத்தியை பயன்படுத்தி முதல் சில ஓவர்களில் அதிரடியாக ரன்களை குவித்தனர். குறிப்பாக சிராஜ் வீசிய நான்கு ஓவர்களில் 28 ரன்கள் சென்றது.
பும்ரா நான்கு ஓவருக்கு 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு மெய்டன் அடங்கும். இந்த நிலையில் ரன்கள் அதிகமாக செல்வதை உணர்ந்த கேப்டன் ரோகித் சர்மா அஸ்வின் மற்றும் ஜடேஜாவை பந்து வீச அழைத்தார். அதன் பிறகு விக்கெட்டுகள் கிடைத்தன. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை ஜோ ரூட் எதிர்கொண்டார்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பு என்றால் அது ஜோ ரூட் தான். இந்த நிலையில் ஜோ ரூட் முதல் பந்தையே பின்னால் அடித்து ரன்கள் ஓட முயன்றார். ஆனால் அந்த பந்து ஜோ ரூட்டின் காலில் பட்டது போல் தெரிந்தது. இதனை அடுத்து நடுவரிடம் அவுட் கேட்டார்கள். ஆனால் நடுவர் அவுட் வழங்கவில்லை. இதனால் ரோஹித் சர்மாவிடம் தயவுசெய்து டிஆர்எஸ் எடுத்து விடுங்கள்.
இது நிச்சயமாக அவுட் தான் என்று கூறினார். ஆனால் ரோகித் சர்மாவும் பந்து பேட்டில் பட்டிருக்கும் என்று தயக்கம் காட்டினார். எனினும் இதை கேட்காத ஜடேஜா கண்டிப்பாக நீங்கள் டிஆர்எஸ் எடுங்கள். நிச்சயமாக இது அவுட் தான் என்று கூறினார். இதனை அடுத்து ரோகித் சர்மா தயக்கத்துடன் டிஆர்எஸ் முடிவை எடுத்தார். டி ஆர் எஸ் பரிசோதனை பார்க்க கொஞ்சம் தாமதமானது. எனினும் மூன்றாம் நடுவர் டிஆர்எஸ் ஆய்வு செய்தபோது பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது.
இதனால், இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டியின் ஆரம்ப கட்டத்திலே ஒரு ரிவ்யூ வீணாகப் போனது. இதனால் ரோகித் சர்மா கடுப்பானார். டெஸ்ட் போட்டிகளில் டிஆர்எஸ் என்பது மிகவும் முக்கியம் என்பதால், அதனை சரியாக பார்த்துதான் பயன்படுத்த வேண்டும். ஆனால் ரோகித் சர்மா ஜடஜாவை நம்பி இம்முறை ஏமாந்து விட்டார். எனினும் அடுத்த ஓவரிலே ஜாக் கிராலி ஆட்டம் இழந்தது ரோகித் சர்மாவுக்கு நிம்மதியை கொடுத்தது. எனினும் ஜோ ரூட்டின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டிய பொறுப்புடன் இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்.