சாக்கு சொல்லாதீர்கள்.. வென்றுவிட்டு பேசுங்கள்.. பென் ஸ்டோக்ஸ்-க்கு இங்கிலாந்து ஜாம்பவான் அட்வைஸ்!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அனி தோல்வியடைந்தால் சாக்கு சொல்ல கூடாது என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்கள் ஐதராபாத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணியால் வெல்ல முடியவில்லை. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கீழ் நிலையில் உள்ளது.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற முடியும். அதேபோல் இந்திய அணி 4-0 என்று இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற முடியும்.

கடைசியாக இங்கிலாந்து அணி 2012ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரை வென்றது. அதேபோல் இந்திய அணி சொந்த மண்ணில் கடைசியாக டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததும் அதுதான். அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகளால் கூட இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முடிந்ததில்லை.

இதனை மாற்ற இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பேசுகையில், இம்முறை இங்கிலாந்து அணிக்கு தரப்பில் எந்த சாக்கும் சொல்லக் கூடாது. கடந்த முறை போல் முதல் டெஸ்ட் வெற்றிக்கு பின் பந்து அதிகமாக ஸ்பின்னாகினாலும், இரு அணிகளும் ஒரே பிட்சில் தான் விளையாட போகிறீர்கள். அதனால் மோசமான பிட்ச் என்றோ, சயியில்லை என்றோ முன்பு கூறியதை போல் சொல்ல கூடாது.

அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் நல்லதல்ல. பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் உள்ளிட்டோர் ஸ்பின்னிற்கு எதிராக நன்றாக தடுப்பாட்டத்தை ஆடக் கூடிய வீரர்கள். அதனால் அவர்கள் இருவரும் அட்டாக் செய்ய ஆசைப்பட்டு விக்கெட் கொடுப்பதை தவிர்க்க முடியும். பவுலர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து, முதல் சில மணி நேரங்கள் பாதுகாப்பாக இருந்தாலே, நிச்சயம் ஸ்கோர் செய்ய முடியும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *