பட்டினி வேண்டாம், பதட்டம் வேண்டாம்… தொப்பையை குறைக்க சுபலமான டிப்ஸ் இதோ

உடல் பருமன் பல வித நோய்களின் நுழைவாயிலாக இருக்கின்றது. இதன் காரணமாக இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் பல வித உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனாலும், அனைவருக்கும் இவற்றால் தேவையான பலன்கள் கிடைப்பதில்லை.

எடை இழப்புக்கான (Weight Loss) வழி ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். இதில் ஒருவரது வாழ்க்கை முறை, உணவு முறை, நாள் முழுதும் அவர் செய்யும் பணிகள், அவருக்கு கிடைக்கும் ஓய்வு நேரம், உறக்கம் என பலவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். எனினும், சில அடிப்படை விஷயங்கள் அனைவருக்கும் ஒன்றாக இருக்கும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் உடல் பருமன் வேகமாக அதிகரித்து வருகிறது. பிஸியான வாழ்க்கை காரணமாக பலரால் உடல் எடையை குறைக்க எதுவும் செய்ய முடிவதில்லை. எனினும், சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலமும், சில பழக்கவழக்கங்களின் மூலமும் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படிப்பட்ட சில இயற்கையான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

புரதச்சத்து அதிகம் உள்ள உணவு

நமது வழக்கமான உணவில் 25-30 சதவிகிதம் புரதம் (Protein) இருக்க வேண்டும். புரதச்சத்து பசியைக் கட்டுப்படுத்துகிறது. பசி கட்டுக்குள் இருந்தால் உடல் எடையை குறைப்பதில் உதவி கிடைக்கும். நாம் தினசரி உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறைந்தால் உடல் எடை அதிகரிக்கும். நீடித்த எடை இழப்புக்கு அதிக புரத உணவுகள் சிறந்தவை. புரதம் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை விட அதிக தெர்மோஜெனிக் விளைவைக் கொண்டுள்ளது. ஜீரணிக்க அதிக கலோரிகள் தேவைப்படுகிறது. புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகள் குறைவான கலோரி அளவைக் கொண்டுள்ளன. ஆகையால் புரதத்தை உட்கொள்வது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

போதுமான அளவு தண்ணீர்

தண்ணீர் (Water) குடிப்பது உடலில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். இது பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான நீர் கிடைத்தால், உடல் அதன் செயல்பாடுகளை சரியாகச் செய்கிறது. எடை இழப்பில் தண்ணீர் மிகவும் முக்கியமான பங்கை அளிக்கின்றது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நீரழிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. நீரிழப்பு தலைவலி, சோர்வு, சோம்பல், குழப்பம், மனநிலை மாற்றங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். இது பசியையும் அதிகரிக்கும்.

சமச்சீர் உணவு

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பீன்ஸ், கொட்டைகள், விதைகள் மற்றும் ஆரோக்கியமான அசைவ உணவுகளின் சரியான கலவை சமச்சீர் உணவாக (Balanced Diet) பார்க்கப்படுகின்றது. சமச்சீர் உணவு எடை இழப்புக்கு உதவி, எடை அதிகரிப்பதை தடுப்பதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. சமச்சீர் உணவு நம் உடலுக்கு நிரம்பிய உணர்வை அளித்து, போதுமான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.

குறைந்த அளவு கார்போஹைட்ரேட்

எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளை (Low Carbohydrate) உணவில் சேர்க்க வேண்டும். இதை குறைப்பது எடையைக் குறைக்க உதவுகிறது. குறைந்த கார்ப் உணவு, உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்கும். குறிப்பாக தொப்பை கொழுப்பை குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமின்றி , கார்போஹைட்ரேட் அளவை குறைப்பது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.

நல்ல உறக்கம்

நல்ல தூக்கம் (Sleep) உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஏனெனில் தூக்கமின்மை உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. தினமும் இரவில் குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நன்றாக உறங்குவது மிக அவசியமாகும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *