”அழகிகளை நம்பாதீங்க”.. குடிமக்களை எச்சரித்த சீன அரசு.. அதிர்ச்சி பின்னணி..!

சீனர் ஒருவர் இரவு விடுதியில் அழகிய பெண்ணை சந்தித்து அவரது அழகில் மயங்கியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, சீனாவில் அரசு நிறுவனத்தில் பணிபுரியும் லி சி, இரவு விடுதிக்கு சென்றுள்ளார். அதில், ‘எவ்வளவு அழகான பெண்களை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்’ என, கூறப்பட்டுள்ளது. அதை நம்பிய லீ சி பெண்ணுடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.

திடீரென்று, சீருடையில் சில வெளிநாட்டினர் உள்ளே நுழைந்து லி ஷீயை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தனர். அப்போது அந்த புகைப்படங்களை காட்டி மிரட்டினர். ஒரு கட்டத்தில் கும்பலிடம் இருந்து தப்பிக்க தனது லேப்டாப்பை கொடுத்துள்ளார். மடிக்கணினியில் அவர் 10 ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த தரவு இருந்ததாக கூறப்படுகிறது. அதற்காகவே வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் மடிக்கணினியை கைப்பற்றியிருக்க வேண்டும் என சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே, ‘அழகான பெண்களை நம்பி ஆபத்தில் சிக்காதீர்கள், அவர்கள் உளவாளிகளாக இருக்கலாம்’ என, அந்நாட்டு குடிமக்களுக்கு, சீன பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, ‘அழகிகளை தேடி அலைந்தால் ஆபத்தில் மாட்டிக் கொள்வீர்கள்’ என்ற வாசகம் அந்நாட்டு செய்தி ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சீனாவின் ரகசிய தகவல்களை திருட வெளிநாட்டு உளவாளிகள் அழகியை பயன்படுத்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *