ரூ.600 கோடி சொத்து வேண்டாம்.. துறவியான குஜராத் தொழிலதிபர் பன்வர்லால் ரகுநாத் தோஷி..!
டெல்லியின் பிளாஸ்டிக் கிங் என்று அழைக்கப்பட்ட தோஷி தனது ரூ.600 கோடி தொழில் சாம்ராஜ்ஜியத்தை விட்டுவிட்டு ஜைன மதத்தில் துறவியாக முடிவு செய்தார்.சர்வதேச வர்த்தக நிறுவனமான டிஆர் இன்டர்நேஷனல் நிறுவனர் தோஷி, ராஜஸ்தானில் உள்ள சிறிய ஜவுளி வியாபாரியான தனது தந்தையிடமிருந்து பெற்ற ரூபாய் 30,000 உடன் தனது வணிகப் பயணத்தைத் தொடங்கினார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான விழாவில், ஒரு ஜெயின் ஆச்சார்யாவின் 108வது சீடராக தோஷி ஆனார். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இந்த விழாவில் கலந்து கொண்டார். பில்லியனரான பன்வர்லால் ரகுநாத் தோஷி தனது பல கோடி ரூபாய் சொத்துகளை விட்டுவிட்டு 2015 ஆம் ஆண்டில் சந்நியாசியாக துறவறம் பூண்டார்.ஜைன மதத்தையும், ஜைன அறிவுறைகளை தொடர்ந்து பின்பற்றி முப்பது ஆண்டுகளுக்கும் மேலான சிந்தனைக்குப் பிறகு, அவர் இறுதியாக திறவம் மேற்கொள்ள வேண்டும் என்ற முக்கியமான முடிவை எடுத்தார். தோஷி துறவறத்துக்கு மாறியதைக் குறிக்கும் விழா மறக்க முடியாதது ஆகும்.இந்த மாபெரும் கூட்டத்தில் ஏறக்குறைய 1.5 லட்சம் பார்வையாளர்கள் மற்றும் சுமார் 1,000 சாதுக்கள் மற்றும் சாத்விகள் பங்கேற்று இருந்தனர். 3.25 லட்சம் சதுர அடி பரப்பளவில் விழா நடத்தப்பட்டு, 35,000 சதுர மீட்டர் பரப்பளவில் உணவு, தண்ணீர் மற்றும் சர்பத் விநியோகிக்கப்பட்டது.1976-ம் ஆண்டு பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் துறையில் ஒரு மாபெரும் புரட்சியின் ஆண்டாகும். இந்த ஆண்டில் தான் டி.ஆர். இண்டர்நேஷனல் நிறுவனம் பன்வர்லால் ஜெயினால் தொடங்கப்பட்டது. பொறியியல் மற்றும் கமாடிட்டி பாலிமர்களுடன் பல்வேறு வகையான பிளாஸ்டிக் மூலப்பொருட்களைக் கையாளும் முன்னணி வர்த்தக நிறுவனமாக டிஆர் இண்டர்நேஷனல் விளங்குகிறது.இந்த பாரம்பரியத்தை தங்கள் விடாமுயற்சியுடன் மயூர் ஜெயின், ரோஹித் ஜெயின் ஆகியோர் தொடர்கின்றனர். டி.ஆர். இன்டர்நேஷனல் வெற்றிகரமாக தொழில்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.அந்த நிறுவனத்தின் மிகவும் திறமையான பணியாளர்கள், வலுவான உள்கட்டமைப்பு, திறமையான பொருள் திட்டமிடல், சிறந்த சப்ளையர்கள் மற்றும் சிறந்த தளவாட மேலாண்மை ஆகியவை அனைத்து வகையான பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் நம்பகமான சப்ளையர்களாக மாற்றியுள்ளது.இப்போது ரூ.700 கோடி வருவாயை அடைந்துள்ளது.