சுவிஸ் நகரமொன்றில் பணியாளர்களுக்கு கிடைத்த இரட்டை ஊதியம்: தொடர்ந்து காத்திருந்த ஏமாற்றம்…
சுவிஸ் நகரமொன்றில், தங்கள் ஊதியத்தை எடுக்க முயன்ற பணியாளர்கள், தங்கள் வங்கிக்கணக்குகளில் இரண்டு மடங்கு ஊதியம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு சந்தோஷமடைந்தார்கள்.
காத்திருந்த ஏமாற்றம்
சுவிட்சர்லாந்தின் Zurich நகரில், பிப்ரவரி மாதம் தங்கள் ஊதியத்தை எடுக்க முயன்ற பணியாளர்கள், தங்கள் வங்கிக்கணக்கில் இரண்டு மடங்கு ஊதியம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதைக் கவனித்துள்ளார்கள்.
தங்களுக்கு போனஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக எண்ணி, இரட்டை ஊதியம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள் அவர்கள்.
ஆனால், பிறகுதான் தெரிந்தது, தவறுதலாக அவர்களுடைய வங்கிக்கணக்குகளில் இரண்டு மடங்கு ஊதியம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது. தொழில்நுட்பக் கோளாறு ஒன்றின் காரணமாக இப்படி நிகழ்ந்துவிட்டதாம். ஆகவே, இரட்டை ஊதியம் பெற்ற அனைவரும், பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதால் கடும் ஏமாற்றமடைந்துள்ளார்கள் அவர்கள்.