இறப்பு நாடகம்: பூனம் பாண்டே மீது 100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு

சினிமா வாய்ப்பு அதிகமாக இல்லாவிட்டாலும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி தன்னை லைம் லைட்டிலேயே வைத்திருப்பவர் பூனம் பாண்டே.

சில நேரங்களில் அது எல்லை மீறி அவரை சிக்கலிலும் மாட்டி விடும். அப்படி ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. சமீபத்தில் பூனம் பாண்டே கர்ப்பபை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

மறுநாள் நான் இறக்கவில்லை. புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அவ்வாறு செய்தேன் என்ற விளக்கம் அளித்தார் பூனம் பாண்டே.பூனம் பாண்டேவின் இந்த இறப்பு நாடகத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மராட்டிய சட்டசபை மேலவை உறுப்பினர் சத்யஜீத் தாம்பே அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இறப்பு நாடகம் ஆடி பொது அமைதியை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாக குற்றம்சாட்டி பூனம் பாண்டே மீது 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு கான்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பைசன் அன்சாரி என்பவர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் மீது கான்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பூனம் பாண்டேவுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் பூனம் பாண்டே நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் வழக்கு தள்ளுபடியாகவும் வாய்ப்பு இருக்கிறது என்று வழக்கறிஞர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *