ஈரமான ரோஜாவே சீரியல் புகழ் திரவியம் நடிக்கப்போகும் புதிய தொடர்- நாயகி இவரா?

ஈரமான ரோஜாவே
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018ம் ஆண்டு சில புது முகங்களுடன் தொடங்கப்பட்ட ஒரு தொடர் ஈரமான ரோஜாவே. திரவியம் மற்றும் பவித்ரா முக்கிய நடிகர்களாக நடிக்க இந்த தொடர் 807 எபிசோடுகள் ஒளிபரப்பானது.

முதல் பாகம் பெரிய வெற்றியடைய புதிய கதைக்களம், வேறு இயக்குனர், புதிய நடிகர்களுடன் ஈரமான ரோஜாவே 2ம் பாகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது.

தொடர் ஆரம்பத்தில் நல்ல விறுவிறுப்புடன் சென்றாலும் இடையில் இயக்குனர் இறப்பு, புதிய இயக்குனர் என நிறைய மாற்றங்கள் நடக்க கதையும் சொதப்பியது.

எனவே 2ம் பாகம் 502 எபிசோடுகளுடன் முடிவுக்கும் வந்தது.

புதிய தொடர்
இந்த ஈரமான ரோஜாவே தொடர் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் தான் திரவியம். ஈரமான ரோஜாவே தொடர்கள் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது, மக்களும் இவருக்கு நிறைய ஆதரவு கொடுத்து வந்தார்கள்.

இந்த நிலையில் திரவியம் இப்போது ஒரு புதிய தொடர் ஒன்று கமிட்டாகியுள்ளார்.

குலோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க திரவியம் நாயகனாக நடிக்கப்போகும் புதிய தொடரை பிரவீன் பென்னட் தான் இயக்க உள்ளாராம். தொடரின் நாயகியாக ஸ்ரீதிகா நடிக்கிறார் என்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *