நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால்…

நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும், மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருள்.

 

ஒருவருக்கு அவர்களின் இறந்து போன தாய்-தந்தையர் கனவில் தோன்றுவார்களேயானால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்திருக்கிறார்கள் என்று பொருள். இது பலரின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவ உண்மையாகும்.

தான் இறந்துவிட்டதுபோல் ஒருவருக்குக் கனவு வருமானால், அது நன்மைகளையே குறிப்பிடும் என எடுத்து கொள்ளலாம். சுக வாழ்க்கை உண்டாகும். உங்களின் உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு வந்தால், அவருடைய துன்பங்கள் வெகு விரைவில் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.

உங்கள் நண்பன் ஒருவன் இறந்து போனது போல் கனவு வந்தால், வெகு விரைவில் ஏதேனும் நற்செய்தி ஒன்று வரும் என்பது பொருள்.

ஒரு நபரின் குழந்தைகள் இறப்பதுபோல் கனவு வந்தால், அவருக்கு வரவிருக்கின்ற பேராபத்து ஒன்றைக் குறிப்பிடும்.

தன்னுடைய மனைவி இறந்து விட்டாற் போல் கனவு உண்டானால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும். ஒருவரின் இறந்து போன மனைவி, விண்ணுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால், அவரின் வாழ்க்கை நிம்மதியாக அமையும். அதே நேரம் ,மறைந்த மனைவியின் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிலையற்றதாக மாறும்.

நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை ஏற்படும். மேலும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், புகழ் பன்மடங்கு பெருகும்.

தான் அடிபட்டு காயமடைந்திருப்பது போல் கனவு கண்டால், தன அபிவிருத்தி உண்டாகும். எனினும் கத்தி, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நன்மையான பலன் தராது. உங்களுக்கு பழி ஏதேனும் வந்து சேரும்.

பிரதமர், ஜனாதிபதி போன்றோர்களுடன் அறிமுகம் ஆவது போல் கனவு கண்டால், சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தும், மதிப்பும் உண்டாகும். மணமாகாத இளம்பெண்கள் மேற்சொன்ன படி கனவு கண்டால், அவளை மணம் முடிக்க போகும் வருங்கால கணவன்,அப்பெண்ணின் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதி மிக்கவனாக இருப்பான் என கொள்ளலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *