இரவில் இதை குடிங்க… சில நாட்களில் தொப்பை கொழுப்பு காணாமல் போய்விடும்
Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது யாருக்கும் எளிதான காரியம் அல்ல. இதற்கு மிகவும் கட்டுப்பாடான உணவு முறையையும் உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். பலமுறை பலவித முயற்சிகளை நாம் எடுத்தாலும் தொப்பை மற்றும் இடுப்பில் சேர்ந்துள்ள கொழுப்பை நம்மால் கரைக்க முடிவதில்லை. கூடுதல் கொழுப்பை நம்மால் கரைக்க முடியாவிட்டால் நாம் நமது வாழ்க்கை முறையில் ஏதோ தவறு செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இரவு உணவு
உடல் எடை குறைப்பதை (Weight Loss) பொறுத்த வரை நாம் பலவித உணவுகளை தவிர்ப்பதற்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை எந்த உணவை சாப்பிடுகிறோம் என்பதற்கும் கொடுக்க வேண்டும். குறிப்பாக இரவில் நாம் உட்கொள்ளும் உணவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரவில் ஒருவர் அதிகமாகவோ அல்லது அதிக கலோரி கொண்ட உணவையோ சாப்பிட்டால், அதன் காரணமாக தொப்பை கொழுப்பும் (Belly Fat) மிக வேகமாக அதிகரித்து விடும்.
பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நிகில் வத்ஸ், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக உணவு (Dinner) உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். ஏனெனில் இரவு உணவு உட்கொண்ட பிறகு உடனேயே தூங்கச் செல்வதால் உடலுக்கு பலவித கேடுகள் ஏற்படுகின்றன. இது தவிர உடல் எடையை குறைக்க உதவும் சில பானங்களையும் உட்கொள்வது நல்லது என்று அவர் தெரிவிக்கிறார். அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடை உடனே குறைக்க இரவில் உட்கொள்ள வேண்டிய பானங்கள்
மஞ்சள் பால் (Turmeric Milk)
மஞ்சளில் (Turmerci) பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. அதன் காரணமாக மஞ்சளை தினசரி உணவில் அடிக்கடி உபயோகிக்க பரிந்துரைக்கப்படுகிறது. பால் ஒரு பரிபூரண உணவாக பார்க்கப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. இந்த இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். ஆகையால் இரவில் மஞ்சள் பால் குடிப்பது தொப்பை கொழுப்பை கரைக்கவும், உடல் எடையை குறைப்பதற்கும் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.
வெந்தய தேநீர் (Fenugreek Tea)
தொப்பை கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் இரவில் வெந்தய (Fenugreek) டீ பருகினால் கண்டிப்பாக சில நாட்களிலேயே கொழுப்பு கரையை தொடுங்கும். இரவில் சில சமயம் அதிகமாக சாப்பிட்டு விட்டால் அந்த உணவை ஜீரணிக்க மேன்மையான செரிமான சக்தி தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட தருணங்களில் செரிமானம் சீராக வெந்தய தேநீர் நமக்கு உதவுகிறது. இது உணவை எளிதாக ஜீரணிக்கச் செய்து எடையையும் குறைக்கிறது.
இதை செய்ய ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இரவில் இதை லேசாக சூடாக்கி குடிக்கலாம். தினமும் இப்படி செய்து வந்தால் சில நாட்களிலேயே உங்கள் தொப்பை கொழுப்பு குறைந்து நீங்கள் பிளாட்டான டம்மியை பெற முடியும்.