திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை..!
திருச்சி சிறுகனூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நாளை (வெள்ளிக்கிழமை) மாலை திருச்சி செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். பின்பு அவர் காரில் தஞ்சை வழியாக திருவாரூர் செல்கிறார். பின்னர் 23-ந்தேதி அவர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சென்னை செல்கிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.