Drumstick Tree : முருங்கைக்கீரையின் அற்புத நன்மைகளை தெரிந்துகொண்டால், தினமும் தேடிச்சென்று உண்பீர்கள்!
ஆயுர்வேதத்தில் ஆரோக்கியமான மூலிகை முருங்கைக்கீரை.
முருங்கை மரம், நம் வீட்டில் இருந்தாலே ஒரு மருத்துவர் வீட்டில் இருப்பதற்கு சமம் என்று பாரம்பரிய மருத்துவம் அறிவுறுத்துகிறது. அதன் ஆரோக்கிய நன்மைகளும், ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. முருங்கையில் உள்ள நற்பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.
மூளையை கூராக்குகிறது
முருங்கையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நியூரோபுரொடென்டிவ் தன்மைகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இது நரம்பியல் வியாதிகளுக்கு எதிரான சத்துக்கள் முருங்கையில் உள்ளது. எனவே முருங்கைக்காய், கீரை மற்றும் பூ என அனைத்தையுமே நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகச்சத்து ஆகியவை இதில் உள்ளது. வைட்டமின் ஏ, சி, இ, பி என இத்தனை வைட்டமின்கள் உள்ளது. மேலும் முருங்கைக்கீரையில் அதிகளவிலான புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
வயோதிகத்தை தடுக்கிறது
முருங்கைக்கீரையில் உள்ள பீட்டா கரோட்டின், கொலோரோஜெனிக் திரவம் மற்றும் குயர்செடின் ஆகியவை உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அழற்சி குறைக்கிறது
ஐசோதியோசையனேட்ஸ், இது முருங்கையில் உள்ள ஒரு வேதிப்பொருள். இது உடலில் அலர்ஜியை எதிர்த்த் போராட உதவுகிறது. அழற்சிதான் உடலில் பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகிறது. எனவே முருங்கையில் உள்ள இந்த வேதிப்பொருள் அழற்சிக்கு எதிராக செயல்பட்டு, உடலை வியாதிகளில் இருந்து பாதுகாக்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு இரண்டையும் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியம் சிறக்கும்போது உடல் நல்ல முறையில் இயங்குகிறது. முருங்கையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சிக்கு எதிரான செயல்திறன் இதயத்தை காக்கிறது.