துபாய் Golden Visa… வேலை இல்லை என்றாலும் 10 ஆண்டுகள் வதிவிட உரிமம்: யாருக்கு இந்த வாய்ப்பு
ஐக்கிய அரபு அமீரகமானது தங்களின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான Golden Visa-வை இதுவரை ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் என பல தரப்பினருக்கும் கடந்த 2019 முதல் வழங்கி வருகிறது.
10 ஆண்டுகள் வதிவிட உரிமம்
தற்போது, ஐக்கிய அமீரகத்தில் வேலையில் இல்லை என்றாலும், 10 ஆண்டுகள் வதிவிட உரிமம் பெற 5 எளிதான வழிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகள் விசாவானது பல்வேறு சலுகைகளை வழங்குகிறது
குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்கு ஐக்கிய அமீரகத்தில் வதிவிட உரிமம், இதில் வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளும் பயன்பெறலாம். அத்துடன் பிள்ளைகளின் வயது வரம்பு 18 என இருந்ததை தற்போது 25 வயது என அதிகரித்துள்ளனர்.
ஆனால் திருமணமாகாத மகள்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. மேலும், வீட்டுக்கான பணியாளர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் வரவழைத்துக் கொள்ளலாம். மேலும் Golden Visa வைத்திருப்பவர்கள் ஐக்கிய அமீரகத்திற்கு வெளியே காலவரம்பின்றி தங்கலாம்.
சுகாதாரத்துறை, ஊடகம், மென்பொருள் மற்றும் பிற தொழில்களில் பணிபுரியும் வல்லுநர்கள், மாதாந்திர சம்பளம் 30,000 திர்ஹாம் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கோல்டன் விசாவிற்கு தகுதியுடையவர்கள்.
ஆனால் சிலருக்கு வேலை இல்லை என்றாலும் 10 ஆண்டுகளுக்கான Golden Visa சலுகை அளிக்கப்படுகிறது. அதில், ஐக்கிய அமீரக குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளவர்கள், அதன் மொத்த மதிப்பு 2 மில்லியன் திர்ஹாம் தொகைக்கும் அதிகமாக இருந்தால் Golden Visa-வுக்கு விண்ணப்பிக்கலாம்.
சிறந்த மாணவர்களுக்கு
2வதாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளூர் வங்கி ஒன்றில் 2 மில்லியன் திர்ஹாம் அளவுக்கு சேமிப்பு வைத்திருந்தால், அவர்களும் Golden Visa-வுக்கு விண்ணப்பிக்கலாம். 3வதாக தொழில்முனைவோருக்கு Golden Visa வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
ஐக்கிய அமீரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறு அல்லது குறு நிறுவனங்களில் ஒன்றில் ஒருவருக்கு சொந்தமாகவோ அல்லது இன்னொருவருடன் இணைந்தோ ஒரு நிறுவனம் செயல்பட வேண்டும். அந்த நிறுவனமூடாக ஆண்டுக்கு குறைந்தது 1 மில்லியன் திர்ஹாம் வருவாய் ஈட்ட வேண்டும்.
மேலும், ஐக்கிய அமீரகத்தில் ஒருவர் நிறுவனம் ஒன்றை நிறுவி அல்லது இன்னொருவருடன் இணைந்து நிறுவிய பின்னர் அதை குறைந்தது 7 மில்லியன் திர்ஹாம் தொகைக்கு விற்றிருந்தால், அந்த நபருக்கும் Golden Visa வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
4வதாக, விஞ்ஞானிகள் அல்லது ஆய்வாளர்கள், பரிந்துரைகளின் அடிப்படையில் Golden Visa வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. 5வதாக ஐக்கிய அமீரகத்தில் திறன்வாய்ந்த மாணவர்களுக்கு, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவர்களுக்கு, அல்லது உலகெங்கிலும் உள்ள சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் சிறந்த மாணவர்களுக்கு Golden Visa வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.