உதயமாகும் புதனால்… வெற்றிகளையும் செல்வத்தையும் குவிக்க போகும் சில ராசிகள்

புதன் உதயம் பலன்கள்: ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்லாது கிரகங்களின் உதயமும் அஸ்தமனமும் வக்ர நிலை மாற்றமும் ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஞானத்தை வழங்கும் கிரகமான புதன் மீனத்தில் உதயமாக உள்ளார். இதனால் சில ராசிக்காரர்கள், பொருளாதார நிலையில் வலுவாக இருப்பதோடு பல வெற்றிகளையும் நிதி லாபங்களையும் அடைவார்கள்.

ஜோதிடத்தில், கிரகங்களின் உதயம் மற்றும் அஸ்தமனம் முக்கியமான ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஒரு கிரகம் அஸ்தமிக்கும் போது, ​​ அதன் வலுவை இழப்பதாகவும், மேலும் அவை உதயமாகும் போது, ​​அவற்றின் வலிமை, செல்வாக்கு அதிகரிப்பதாகவும் கருதப்படுகிறது. புதன் உதயமாவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இது நாள் வரை வாட்டி வந்த பிரச்சனைகள் நீங்கும், தொல்லைகள் தீரும். வாழ்க்கையில் புதிய உதயத்தை காண்பார்கள்.

புதனின் உதயத்தால் ஆதாயம் அடையும் சில ராசிகள்

ரிஷப ராசி (Taurus zodiac)

ரிஷப ராசியினர் புதனின் உதயத்தால் சிறப்பான பலன்களை பெறுவார்கள். புதிய வருமான ஆதாரம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். முதலீடு செய்ய ஏற்ற காலமும் கூட. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் . கிடைக்கும் வாய்ப்புகள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வந்து சேர்ப்பவை ஆக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகள் பாராட்டப்பட்டு, உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். சலுகைகளும், புதிய பொறுப்புகளும் வந்து சேரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்க யோகம் உள்ளது. பங்குச் சந்தை, சொத்து மற்றும் தங்கம் – வெள்ளி வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு, இந்த நேரம் குறிப்பாக மிகவும் நன்மை பயக்கும்.

மிதுன ராசி (Gemini zodiac)

மிதுன ராசியினருக்கு புதனின் உதயம், அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பதாக அமையும். முதலீடுகளில் இருந்து நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் மனதிற்கு நிம்மதியை தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். பணியிடத்தில் கௌரவமும் புகழும் கூடும். குடும்ப பேச்சு நிலவும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் லாபம் உண்டாகும்.

கும்ப ராசி (Aquarius zodiac)

கும்ப ராசியினர் புதன் உதயத்தினால் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள் ஞானத்தை வழங்கும் புதனின் தாக்கம் காரணமாக அறிவுத்திறனும் ஆளுமையும் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் மூலம் பணவரவு அதிகரிக்கும். சேமிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். புதிய திட்டங்களை தொடக்க ஏற்ற நேரம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகள் தரப்பில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் துறையில் முன்னேற்றம் அடைவார்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *