ரூ.400 கோடியை தாண்டிய டன்கி: படிப்படியாக குறைந்த சலார் படத்தின் வசூல்!
கேஜிஎஃப் – 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சலார் திரைப்படம் டிச.22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றன. ஜனவரி 1ஆம் தேதி வரை ரூ. 625 கோடி வசூலித்ததாக படக்குழு கூறியது.
பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படம் கடந்த டிச. 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் டாப்ஸி, விக்கி கெளஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
உலகளவில் வெளியான இப்படம் இதுவரை விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுது.
இந்நிலையில் டன்கி படக்குழு இதுவரை ரூ. 409 கோடி வசூலித்துள்ளதாக கூறியுள்ளது.
சலார் படம் ஆக்ஷன் படம். மாஸ் ஓபனிங் இருந்தும் படிப்படியாக வசூல் குறைந்து வருகிறது. டன்கி ஆக்ஷன் காட்சிகள் இல்லாமலே 400 கோடி ரூபாயை தாண்டி இருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.