முன்னால் எம்.பி.யின் மனைவி சாலை விபத்தில் பலி… தந்தையுடன் உயிர் தப்பிய மகன்!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கார் விபத்தில் முன்னாள் அமைச்சரின் மருமகளும், முன்னாள் எம்.பி.யின் மனைவியுமான சித்ரா சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான மன்வேந்திர சிங் தனது குடும்பத்துடன் காரில் பயணித்துள்ளார்.

இவர்களது கார் டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள சிமெண்ட் சுவரின் மீது பெரும் விபத்துக்குள்ளானது. வேகமாக மோதியதால், கார் அப்பளமாய் நொறுங்கியதில், காரில் பயணித்த மன்வேந்திர சிங், அவரது மனைவி சித்ரா சிங், மகன் ஹமிர் சிங் மற்றும் ஓட்டுநர் என 4 பேரும் படுகாயமடைந்த நிலையில், அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சித்ரா சிங் உயிரிழந்தார். முன்னாள் எம்.பி., மன்வேந்திர சிங் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மகனும், ஓட்டுநரும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *