சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்; நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி… பதைபதைக்க வைக்கும் காட்சி
சீனாவின் கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று (டிசம்பர் 19) தாக்கியது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கன்சு மாகாண தலைநகரான லான்ஜோவிலிருந்து 102 கிமீ மேற்கு-தென்மேற்கில் 35 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 11.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
Actualización #sismo en Linxia Chengguanzhen, #China🇨🇳
🔸Se reportan más de 100 decesos.
🔸Hay decenas de colapsos de viviendas ubicadas en localidades aisladas cercanas próximas al epicentro.
🔸USGS ajustó magnitud de 6.0 a 5.9. Foco a solo 10 km de profundidad.
🔸Es posible… pic.twitter.com/gi7yybZQy6— SkyAlert (@SkyAlertMx) December 19, 2023
தவிடுபொடியான கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 230க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
The 6.2-magnitude #earthquake that jolted an ethnic county in Northwest #China‘s #Gansu province midnight Monday has killed 111 people in Gansu and neighboring Qinghai province.
The provincial fire and rescue department has sent 580 rescuers aided with 88 fire engines, 12 search… pic.twitter.com/mMLsZ0QMoL
— Bridging News (@BridgingNews_) December 19, 2023
#ÚLTIMAHORA 🔵🔴 Sismo de Magnitud 5.9 en Linxia Chengguanzhen, #China, deja un saldo preliminar de 111 personas muertas y más de 200 heridas #SVNNoticias pic.twitter.com/Khi1PY7e72
— Sonora Visión Noticias (@SVNNoticias) December 19, 2023
கன்சு, கிங்காய் ஆகிய வடமேற்கு மாகாணங்களுக்கு இடையிலான எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவுத் சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமாக சின்ஹுவா கூறியுள்ளது. திங்கட்கிழமை நள்ளிரவு மட்டும் வெவ்வேறு இடங்களில் 3 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 9 நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.