10 நிமிஷத்தில் இரும்பு தோசை கல்லை சுத்தம் செய்ய ஈஸியான டிப்ஸ்.. நீங்கள் தயாரா..??
இப்போது பல வீடுகளில், காய்கறிகள் சமைப்பதில் இருந்து தோசை சுடுவது வரை அனைத்திற்கும் பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பலவகைகளில் வரத் தொடங்கியுள்ளன. ஆனால் இன்னும் பெரும்பாலான வீடுகளில் இரும்பு தவாவை தான் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் கவனித்திருந்தால், சிறிது நாள் கழித்து அந்த இரும்பு தவா துருப்பிடிக்கத் தொடங்குகிறது மற்றும் அதனை சுற்றி அழுக்குகள் ஒட்டிக்கொண்டிருக்கும். இதனால் உணவின் தரம் பாதிக்கப்படும். எனவே இரும்பு தவாவை நாம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
உங்கள் இரும்பு தவாவை சுத்தம் செய்ய விரும்பினால், அதை எப்படி செய்வீர்கள்? கடைகளில் இருந்து பொருட்களை வாங்குவதன் மூலம் உங்கள் தவாவை பிரகாசிக்க முயற்சி செய்கிறீர்களா? தவாவில் உள்ள கருமையை நீக்கவும், துருவை சுத்தம் செய்யவும், உங்கள் தவா புதியது போல தோற்றமளிக்கும் ஒரு தந்திரம் உள்ளது. அதை பயன்படுத்ததினால் உங்கள் தவாவில் படிந்திருக்கும் எண்ணெய் கரை போய்விடும். நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இரும்பு தவாவை பராமரிக்க குறிப்புகள்:
நீங்கள் ஒவ்வொரு முறையும் இரும்புத்தவாவை பயன்படுத்திய பிறகு அதை உடனே கழுவ மறக்காதீர்கள். இதனால் அதில் அழுக்குகள் குவிவதைத் தடுக்கும்.
முக்கியமாக தவாவை ஒருபோதும் நீண்ட நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டாம். இதனால் அது விரைவில் துருப்பிடிக்க ஆரம்பிக்கும்.
அதுபோல், தவாவை எப்போது சுத்தம் செய்தாலும் மென்மையான ஸ்பாஞ்ச அல்லது ஸ்க்ரப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், தவாவின் மேற்பரப்பு கீறப்பட்டு, மேலடுக்கை அகற்றிவிடும்.
மேலும் இரும்பு தாவாவை எப்போதும் உலர்ந்த இடத்தில் தான் வைக்க வேண்டும் குறிப்பாக அதன் மேல் கனமான பொருட்கள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இரும்பு தவாவை சுத்தம் செய்வதற்கான வழிகள்:
வினிகர்: முதலில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் வினிகர் நன்கு கலக்கவும். பிறகு ஒரு ஸ்பான்ஜ் எடுத்து அதில் நனைத்து தவாவில் மெதுவாக தேய்க்க வேண்டும். சிறிது நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு தண்ணீர் விட்டு நன்கு சுத்த செய்ய வேண்டும்.
எலுமிச்சை மற்றும் உப்பு: முதலில் ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி உப்பைத் தொட்டு தவாவில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் அப்படியே வைத்த பிறகு மென்மையான ஸ்க்ரப் மூலம் தவாவை நன்கு தேய்க்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு துடைத்தெடுக்க வேண்டும்.
சூடான தண்ணீர்: தவாவில் ஒட்டி இருக்கும் அழுக்கை போக்க வெதுவெதுப்பான நீரில் தவாவை கழுவ வேண்டும் பிறகு டிஷ் வாஷ் மூலம் தவாவை சுத்தம் செய்ய வேண்டும் பிறகு மீண்டும் சூடான நீரை பயன்படுத்தி தவாவை துடைத்தெடுக்க வேண்டும் இப்போது தவா மீண்டும் பளப்பளக்கும்.