உடல் பருமனை குறைக்க ஈசி வழி: இரவில் இப்படி, இதை சாப்பிடுங்க போதும்

Weight Loss Tips: உடல் பருமன் என்பது இன்றைய நாட்களில் பலருக்கு உள்ள பிரச்சினையாக இருக்கிறது. உடலின் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகிறது, ஆனால் அதை குறைப்பது மிக கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது. குறிப்பாக வயிற்றில் கொழுப்பு சேர்ந்து விட்டால் அதை குறைப்பது ஒரு சவாலாகவே உள்ளது. உடல் பருமனை குறைப்பதற்கு இன்றைய காலகட்டத்தில் பலர் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஜிம், வாக்கிங், யோகா, டயட்டிங் என மக்கள் எடுக்காத நடவடிக்கைகளே இல்லை என்றே கூறலாம். ஆனால் இவற்றின் மூலம் மிகச் சிலருக்குதான் பலன்கள் கிடைக்கின்றன.

வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கலாம் . உடல் எடை அதிகரித்து விட்டால் அதன் காரணமாக பல நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன. வயிற்றுக் கொழுப்பை குறைப்பது எப்படி? இதற்கான சரியான வழிமுறை என்ன? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

சில எளிய இயற்கையான வழிகளிலும் நாம் நம் உடல் எடையை குறைக்க (Weight Loss) முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சில சிறிய விஷயங்களை கவனத்தில் கொள்வதன் மூலம் நாம் மிகப்பெரிய பலன்களை அடையலாம். தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடை குறைக்க வேண்டுமானால் இரவில் நாம் செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

உடல் எடையை குறைக்க உணவு முறையில் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்வது மிக அவசியம். எந்த உணவை எப்போது சாப்பிடுகிறோம் என்பதில் முழு கவனம் இருக்க வேண்டும். நான் தினசரி உட்கொள்ளும் உணவின் தாக்கம் நமது உடல் எடையிலும் இருக்கிறது. தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க நமது உணவில் பல மாற்றங்களை செய்ய வேண்டும். உடல் எடை குறைய இரவில் நாம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? இவற்றைப் பற்றிய புரிதல் இருப்பது மிக அவசியம். இது நம் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமையலாம். உடல் எடையை குறைக்க செய்ய வேண்டிய சில சிறப்பு பணிகளை பற்றி இங்கே காணலாம்.

உடல் எடையை குறைக்க இரவில் இதை செய்யவும் (Night Routine For Weight Loss)

சரியான அளவில் உணவை உட்கொள்ள வேண்டும்

நமக்கு இருக்கும் பசியின் அளவை விட சற்று குறைவாகவே எப்போதும் உணவை உட்கொள்ள வேண்டும் என்று பலர் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். இது மிகவும் சரியான விஷயமாகும். அதாவது உதாரணமாக நான்கு தோசை சாப்பிட வேண்டும் என்று இருந்தால் மூன்று தோசையோடு நிறுத்திக் கொள்வது நல்லது. உடல் எடை குறைக்க இது ஒரு முக்கியமான விதியாக கருதப்படுகிறது. குறிப்பாக இரவு வேளையில் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்

லேசான உணவுகள்

இரவில் மிக லேசான உணவையே (Light Dinner) உட்கொள்ள வேண்டும். ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது. மேலும் இரவு வேளையில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

இரவில் இதை குடிக்கலாம்

இரவில் க்ரீன் டீ அல்லது புதினா டீ குடிக்கலாம். இரவு தூங்குவதற்கு முன்பாக கண்டிப்பாக ஒரு கிளாஸ் வெந்நீர் அருந்துவது நல்லது. இதனால் வளர்ச்சிதை மாற்றம் மேன்மை அடைகிறது. உணவும் எளிதில் ஜீரணம் ஆகிறது. இரவு உணவு உட்கொண்ட பிறகு பாலுடன் சேர்த்த தேநீர் அல்லது காபியை அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

சரியான நேரத்தில் இரவு உணவு

இரவு உணவை மிக தாமதமாக (Time of Dinner) உட்கொள்வது உடல் எடை அதிகரிப்பதற்கான மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் இரவில் மிக தாமதமாக உணவை உட்கொண்டு அதன் பிறகு உடனே உறங்கி விடுகிறார்கள். இப்படி செய்தால் உடல் எடை மிக வேகமாக அதிகரிக்கும். இப்படி செய்வது ஆரோக்கியத்திற்கு முற்றிலும் கேடானது. இரவு ஏழு மணியிலிருந்து எட்டு மணிக்குள் இரவு உணவை உட்கொள்வது நல்லது. இரவு உணவை சரியான நேரத்தில் (Time of Dinner) எடுத்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் மிக முக்கிய ஒன்று. இரவு உணவு உட்கொண்ட பிறகு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு பின்னரே தூங்க வேண்டும். இரவில் மிக தாமதமாக சாப்பிட்டால் வளர்ச்சிதை மாற்றம் மிகவும் மெதுவாக நடக்கும். ஜீரண செயல்முறையிலும் தாக்கம் ஏற்படலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *