இரண்டுக்கும் மேற்பட்ட UAN எண்களை இணைக்க ஈசி வழிகள்!
ஒரு நபர் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாற்றமாகும் பொழுது புதிய எம்ப்ளாயர் எம்ப்ளாயிக்கு புதிய ஒரு எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட் அக்கவுண்ட்டை திறப்பார். அனைத்து EPF அக்கவுண்ட்களும் ஒரு யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பருடன் (UAN) இணைக்கப்பட்டிருக்கும்.
எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனமானது (EPFO) UAN எனப்படும் 12 இலக்க தனித்துவமான எண்ணை வழங்குகிறது. இந்த UAN உங்களது கெரியர் முழுவதும் நீடிக்கும். நீங்கள் வேலை மாற்றம் செய்தால் கூட உங்களுடைய UAN மாறாமல் அப்படியே இருக்கும். உங்களின் அனைத்து பழைய UANகளை இணைப்பதன் மூலமாக நீங்கள் தேவையில்லாத இழப்புகளை தவிர்க்கலாம்.
ஒரு எம்ப்ளாயிக்கு பல்வேறு காரணங்களால் ஒரு புதிய UAN நியமிக்கப்படலாம். ஒரு நபர் தன்னுடைய மெம்பர் ID மற்றும் UAN வழங்காமல் புதிய ஒருவேளைக்கு மாறும்பொழுது புதிய எம்ப்ளாயர் அந்த எம்ப்ளாய்க்கு புதிய ஒரு UAN மற்றும் EPF அக்கவுண்டை திறப்பார். மாறாக பழைய எம்ப்ளாயர் எம்ப்ளாயியின் கடைசி வேலை பார்த்த நாளை எலக்ட்ரானிக் சலான் மற்றும் ரிட்டனில் பதிவு செய்யாமல் இருக்கலாம் (ECR).
பல்வேறு EPF அக்கவுண்ட்களை இணைப்பதற்கான அனுமதியை UAN வழங்குகிறது. UAN பயன்படுத்தி ஒருவர் தன்னுடைய அனைத்து EPF அக்கவுண்டுகளையும் ஒன்றாக இணைக்கலாம். ஒரு EPF அக்கவுண்ட்டை ஒரு புதிய எம்ப்ளாயருடன் திறக்கும் பொழுது ஒரு EPF மெம்பர் தன்னுடைய UAN ஐ கட்டாயமாக வழங்க வேண்டும். புதிய EPF அக்கவுண்ட் உருவாக்கப்பட்டதும் பழைய ஒன்றில் இருக்கக்கூடிய பணம் புதியதில் எளிதாக மாற்றப்படும். ஒருவேளை உங்களுடைய புதிய நிறுவனம் உங்களுக்கு புதிய UAN உருவாக்கினால் உங்களுடைய அனைத்து UAN -களையும் நீங்கள் ஒன்றாக இணைக்க வேண்டும்.
இரண்டுக்கும் மேற்பட்ட UAN -களை இணைப்பது எப்படி?
படி 1: https://unifiedportal-mem.epfindia.gov.in
என்ற மெம்பர் சேவா போர்ட்டலுக்கு செல்லவும்.
படி 2: ஹோம் பேஜில் ‘ஆன்லைன் சேவைகள்’ பிரிவின் கீழ் காணப்படும் ‘One member – One EPF Account (Transfer Request)’ என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
படி 3: இப்பொழுது ஸ்கிரீனில் உங்களது தனிப்பட்ட விவரங்கள் காண்பிக்கப்படும். இது உங்களுடைய தற்போதைய எம்ப்ளாயரின் EPF அக்கவுண்ட் போன்ற விவரங்களை காண்பிக்கும்.
படி 4: பழைய அல்லது இதற்கு முந்தைய அக்கவுண்ட்டை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கு நீங்கள் பழைய அல்லது தற்போதைய எம்ப்ளாயரிடம் இருந்து அட்டஸ்டேஷன் பெற வேண்டும். தற்போதைய எம்ப்ளாயரிடம் அட்டஸ்டேஷன் பெறுவதன் மூலமாக இந்த செயல் முறையை ஒருவர் விரைவாக செய்து முடிக்கலாம். இதன்பிறகு உங்களுடைய பழைய மெம்பர் ஐடியை என்டர் செய்யவும். ‘Get Details’ என்பதை தேர்வு செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய முந்தைய EPF அக்கவுண்டுகள் சம்பந்தப்பட்ட விவரங்கள் காண்பிக்கப்படும்.
படி 5: ‘Get OTP’ ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பப்படும். OTP ஐ என்டர் செய்து சப்மிட் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
படி 5: ‘Get OTP’ ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பப்படும். OTP ஐ என்டர் செய்து சப்மிட் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
உங்களுடைய எம்ப்ளாயர் அங்கீகாரம் வழங்கிய பிறகு, உங்களுடைய முந்தைய மற்றும் தற்போதைய EPF அக்கவுண்டுகளை EPFO பிராசஸ் செய்யும். இந்த செயல்முறை குறித்த அப்டேட்டுகளை நீங்கள் அவ்வப்போது போர்டலில் வந்து தெரிந்து கொள்ளலாம்.