மாலை வேளையில் சாப்பிட சுடச் சுடச் சத்தான பூசணி சூப்: இப்படி செய்யுங்க
பூசணிக்காய் உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியது. சத்து நிறைந்தது. அந்த பூசணியில் சுவையான சூப் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பூசணிக்காய் – 1 கப்
பூண்டு – 6-7 பற்கள்
சின்ன வெங்காயம்- 4
முந்திரி 6-7
வெண்ணெய் -1 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பால் – 1 டம்ளர்
மிளகுத்தூள், சீரகத்தூள்- 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் 4 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
பூசணிக்காய் வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு காயை மட்டும் எடுத்து ஆற வைத்த பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இப்போது அரைத்த விழுதை, காய் வேகவைத்த தண்ணீரில் கலக்கவும்.
இதனுடன் பால், மிளகு, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். அவ்வளவு தான் சுவையான பூசணி சூப் ரெடி.