தொப்பை கொழுப்பை சிம்பிளா குறைக்க காலையில் இந்த உணவை சாப்பிடுங்க: ஈசியா குறைக்கலாம்
உடல் பருமன் என்பது இந்நாட்களில் மக்களை பாடாய் படுத்தி வரும் ஒரு பிரச்சினையாக மாறி வருகின்றது. இது உடலுக்கு பலவித அசவுகரியங்களை ஏற்படுத்துவதோடு இன்னும் பல நோய்கள் வரவும் காரணமாக அமைகின்றது. இன்றைய அவசர வாழ்க்கையில் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையே உடல் பருமனுக்கான முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. பிசியாக ஓடிக் கொண்டிருக்கும் நாம் நமது உணவில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. இதனால் நாளடைவில் உடல் எடை அதிகரித்து பலவித பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம்.
உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் இதைக் குறைப்பது ஒரு பிரம்மபிரயத்தமாகவே உள்ளது. உடல் எடையை குறைக்க பலர் பலவித முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்து விட்டால் அதை அகற்றுவது மிக கடினமாக உள்ளது. வயிற்றில் சேரும் கொழுப்பை அகற்ற பல பரிந்துரைகளின் பேரில் பலவற்றை உட்கொள்கிறோம். எனினும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களை உட்கொண்டால் வயிற்றுக் கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்கலாம். எடை இழப்பில் (Weight Loss) நமக்கு பெரிதும் உதவக்கூடிய காலை உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அவல்
உடல் பருமனை ஒரேடியாக குறைப்பது சாத்தியமில்லை. தினம் நாம் உட்கொள்ளும் உணவுகளின் மூலமே சீராக இதை நாம் செய்ய முடியும். உடல் பருமனை குறைக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து நாம் உட்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட உணவு தான் அவல் (Poha). இது மிகவும் லேசான காலை உணவாக பார்க்கப்படுகின்றது. இது நமது உடல் எடையை அதிகரிக்காது. பலவித காய்கறிகளை சேர்த்து உப்புமாவாக செய்து காலை உணவில் அவலை உட்கொண்டால் நமக்கு நாள் முழுவதும் லேசான உணர்வு இருக்கும்
ஓட்ஸ்
தொப்பை கொழுப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு ஓட்ஸ் (Oats) சிறந்த காலை உணவாக இருக்கும். இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நிகில் வத்ஸ், காலை உணவில் ஓட்ஸ் உட்கொள்ள பரிந்துரைக்கிறார். தொப்பை கொழுப்பைக் குறைக்க ஓட்ஸ் ஒரு நல்ல காலை உணவாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
முட்டை
எடை குறைக்க விரும்பும் நபர்கள் சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு உட்கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கு முட்டை (Eggs) ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது ஒரு சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகின்றது. முட்டையை உட்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் நமக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதுடன் நாம் புத்துணர்ச்சியுடனும் உணர்கிறோம்.
சியா விதைகள்
நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள சியா விதைகள் (Chia Seeds) காலை உணவிற்கு ஒரு சத்தான தேர்வாக இருக்கும். சியா விதைகள் வயிற்றுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றன. இதனால் நாம் தேவையற்ற ஆரோக்கியமாற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. மேலும் இது தொப்பை கொழுப்பை மிக விரைவில் குறைக்கின்றது.