தக்காளி சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தை செமையா குறைக்கும் தெரியுமா? இனிமே டெய்லி சாப்பிட மறந்துறாதீங்க
தக்காளி நம் உணவில் மிகவும் தவிர்க்க முடியாத ஒரு உணவுப்பொருளாகும். தக்காளி சுவையான உணவுப்பொருள் என்பது தவிர தக்காளி நம் உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நம்பமுடியாத அளவிற்கு ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் ஆரோக்கியமானது.
தக்காளியின் புளிப்பான சுவை இல்லாமல் பெரும்பாலான உணவுகளை நம்மால் தயாரிக்க முடியாது.
இது ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் காணப்படும் ஒரு முக்கிய சிவப்பு ரத்தினமாகும். வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் கே, தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட தக்காளி, தீவிர நோய்களுக்கு எதிராக போராட உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர் டென்க்ஷனை கட்டுப்படுத்த உதவும் பரவலாக அறியப்பட்ட உணவுப் பொருளாகும்.
உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் தக்காளியின் பங்கு மற்றும் இந்த நைட்ஷேட் காய்கறியை எவ்வாறு முழுமையாகப் பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தக்காளி எவ்வாறு உதவுகிறது?
உயர் இரத்த அழுத்தம் பொதுவாக உணவில் சோடியம் அதிகரிப்பதால் ஏற்படுகிறது. பொட்டாசியம் அதிகம் உள்ள எந்த உணவும் உங்கள் உடலில் சோடியத்தின் அதிகரித்த சதவீதத்தை ஈடுசெய்யும். தக்காளி பொட்டாசியத்தின் வளமான மூலமாகும், எனவே அவை உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
கூடுதலாக, ஹெல்த்லைன் படி, தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட இதய நோய் ஆபத்து காரணிகளை கணிசமாக குறைக்க உதவும். உணவில் தக்காளி சேர்த்துக் கொள்வதன் அவசியம் என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் ஆற்றல் மையம்
வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் கே, தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக தக்காளி உள்ளது. இந்த சக்திவாய்ந்த காய்கறி நோயை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் உங்கள் சருமத்தை சூரிய ஒளியைப் போல மிளிரச் செய்கிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் தசைகளுக்கும் முக்கியப்பொருளாக கருதப்படுகிறது.