ஜப்பானின் ஒசாகோ, கோச்சி நகரங்களுடன் பொருளாதார ரீதியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
சென்னை: மாநாட்டில் பங்கேற்ற தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர் களிடம் கூறியதாவது: ஜப்பானில் உள்ள நகரங்களில் ஏற்கெனவே ஹிரோஷிமாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது.
இந்நிலையில், ஒசாகோ மற்றும் கோச்சி நகரங்களுடன் பொருளாதார ரீதியிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜப்பான் நாட்டினர் அதிகளவில் முதலீடுகளை தமிழகத்தில் செய்துள்ளனர்.
ஜப்பான் நிறுவனங்களில் தமிழக பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க உள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. முதல்வரின் பரவலாக்கப்பட்ட முயற்சிக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மிகப்பெரிய வளர்ந்த நாடுகளில் கூட இல்லாத அற்புதமான சூழலாக பெண்களுக்கு பாதுகாப்பானதாக தமிழகம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.