எடப்பாடிக்கு இதைவிட பெரிய சான்ஸ் கிடைக்காது! திமுக – காங்கிரஸ் சீட் ஷேரில் ஆரம்பமே அல்லோகலம்! அடடா
சென்னை: திமுகவின் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு திமுகவிடம் 21 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுள்ளது. ஏற்கனவே வென்ற 9 தொகுதிகள் + 12 தொகுதிகள் என்று கூடுதலாக கேட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே வென்ற தொகுதிகளான,
1. திருவள்ளூர் (SC)
2. கிருஷ்ணகிரி
3. ஆரணி
4. கரூர்
5. திருச்சிராப்பள்ளி
6. சிவகங்கை.
7. தேனி:
8. விருதுநகர்:
9. கன்னியாகுமரி
அதேபோல் இப்போது திமுக மற்றும் திமுக கூட்டணி இருக்கும்,
1. திருநெல்வேலி
2. ராமநாதபுரம்
3. தென்காசி (SC)
4. திண்டுக்கல்
5. திருவண்ணாமலை
6. தஞ்சாவூர்
7. மயிலாடுதுறை
8. பெரம்பலூர்
9. கள்ளக்குறிச்சி
10. காஞ்சிபுரம் (SC)
11. தென் சென்னை
12. அரக்கோணம்
திமுக பிளான் என்ன?: ஆனால் திமுக காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களை கொடுக்க திட்டமிட்டுள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு காங்கிரசுக்கு கடந்த முறை போல 10 இடங்களை கொடுக்காமல் 7 இடங்களுக்குள் சுருக்கும் முடிவில் திமுக உள்ளதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் சமீபத்தில் காங்கிரசின் தோல்வி.. திமுகவிற்கு கூட்டணி ரீதியாக அதிக பவரை கொடுத்துள்ளதாம்.
திமுக திட்டம் என்ன?: லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 7- 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி பிளான்: இந்த நிலையில்தான் திமுகவின் காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கியமான பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம்.
அதிமுக பொதுச்செயலாளர் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் மதிப்பிற்குரிய சோனியா காந்தி, மதிப்பிற்குரிய ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
முக்கியமாக இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவை பிரித்து.. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தனி கூட்டணி உருவாக்க எடப்பாடி முயல்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசை இழுக்க திட்டம்: கடந்த சில வாரங்களுக்கு முன் அதிமுக – பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது.