Elaneer Halwa: இளநீர் அல்வா சாப்பிட்டு இருக்கீங்களா?
நமது உடலின் சூட்டை தணிப்பதில் சிறந்த பானமாக இளநீர் இருக்கிறது.
இளநீர் குடிப்பது மட்டுமல்லாமல் அதை பல வகையாக உண்டிருப்பீர்கள். இளநீர் உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.
உடல் நலத்தில் பல வகையாக நன்மை புரியும் இந்த இளநீரை வைத்து அல்வா செய்து சாப்பிட்டு இருக்கீங்களா ?
உங்களுக்காக இந்த பதிவில் இளநீர் அல்வா எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இளநீர்- 1
கார்ன்பிளார் மாவு- ஒரு கப்
சர்க்கரை- அரை கப்
ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்
முந்திரி, பாதாம்- 10
செய்யும் மறை
ஒரு கோப்பையில் இளநீரை ஊற்றி கான்பிளவர் மாவை நன்றாக கலந்து வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம் பருப்பை வறுத்து வைக்க வேண்டும்.
இதை தனியே எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள இளநீர் கரைசலை ஊற்ற வேண்டும்.
இது கொஞ்சம் கெட்டியாக வரும் போது அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிண்ட வேண்டும்.
பின்னர் இளநீர் வழுக்கையை சீவி எடுத்து சிறுது சறிதாக வெட்டி இளநீர் அல்வா கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் அதில் வழுக்கை துண்டுகளை சேர்க்க வேண்டும்.
பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாமை இதனுடன் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்து கிண்டி எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான இளநீர் அல்வா தயார் .