தேர்தல் பத்திரங்கள் : டைம் கேட்ட எஸ்பிஐ.. இன்று உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன?
கட்சிகளுக்கு நிதியளிக்கும் தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும், அந்த திட்டம் செல்லாது எனவும், கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. மேலும், யார், யாருக்கு எவ்வளவு நன்கொடை அளித்தனர் என்ற முழு விவரங்களையும், மார்ச் மாதம் 6-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அவகாசம் முடிவதற்கு 2 நாட்கள் முன்னதாக உச்சநீதிமன்றத்தை நாடிய எஸ்பிஐ வங்கி தரப்பு, தகவல்களை திரட்டுவற்கு தாமதமாவதால், ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தங்களால் முடியும் என்ற போதும், வேண்டுமென்றே SBI தாமதம் செய்வதாக குற்றம்சாட்டி, பாரத ஸ்டேட் வங்கி மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த 2 மனுக்கள் மீதும், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று காலை விசாரணை நடத்தவுள்ளது.