யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடபட்ட யானை பொங்கல்..!

பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனசரகம்டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும்விதமாக ஆண்டு தோறும் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி இந்தாண்டு கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஏற்பாடு செய்யபட்டிருந்த யானை பொங்கல் விழாவில்காலை யானைகள் குளிக்க வைக்கப்பட்டு, பொட்டு வைத்து மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்பட்டி மண் பானையில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு படைக்கப்பட்டு பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை மற்றும் ஒவ்வொருயானைக்கும், கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. இந்த யானை பொங்கல் விழாவில்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர் ஆர்வத்துடன்கண்டு ரசித்தனர்

வழக்கமாக வீட்டு பொங்கல், மாட்டுப்பொங்கல், பூப்பொங்கல் கொண்டாடும் நிலையில் யானைகளுக்கு மரியாதைசெலுத்தும் விதமாக கொண்டாடபட்ட யானை பொங்கல் விழாவில் கலந்து கொள்வது புது அனுபவம் என சுற்றுலாபயணிகள் தெரிவித்தனர். இங்கு ஒரே இடத்தில் சின்னத்தம்பி, அரிசி ராஜா என்கிற முத்து உட்பட 26க்கும்மேற்பட்ட யானைகளை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *